விருப்பமாக சீரியல் பார்க்கும் ரசிகர்களையே சாகடித்து வந்த விஜய் டிவி சீரியல் ஒன்று விரைவில் நிறுத்தப்பட உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மன நிம்மதியைக் கொடுத்துள்ளது. எவ்வளவு நாளைக்கு தான் ஒரே உருட்ட உருட்டுவாங்க.
தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை சீரியல்கள் என்றால் மூன்று சேனல்கள் தான். ஒன்று சன் டிவி, ஆனால் அதில் வரும் சீரியல்கள் சமீபகாலமாக ரசிகர்களை கவரவில்லை. அடுத்தது விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்களை போலவே விஜய் டிவி சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னொன்று ஜீ தமிழ். அதிலும் சீரியல்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி என்ற சீரியல் விரைவில் நிறுத்தப்படவுள்ளன.
எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் தலையெழுத்தே என ஓடி வந்தது இந்த சீரியல். ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவர் இந்த சீரியலில் நடித்ததால் ஆரம்பத்தில் இந்த சீரியல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் சீரியல் ஒளிபரப்பப்பட்ட பிறகு ஏண்டா எதிர்பார்த்தோம் என்ற அளவுக்கு இருந்ததாம் அந்த சீரியல். அதுமட்டுமில்லாமல் ஹீரோயிஸம் காட்டுகிறேன் என ஹீரோ பண்ற வேலையெல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லையாம். ஹீரோயின் அழகாக இருந்து என்ன பண்றது, நடிப்பு வரலையே என்கிறார்கள் சமூக வலைதள வாசிகள்.
இது யார் காதில் விழுந்ததோ இல்லையோ, விஜய் டிவியினர் காதில் நன்றாக விழுந்து விட்டது போல. விரைவில் இந்த காற்றின் மொழி சீரியலுக்கு எண்டு கார்டு போடவுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்புவதற்கான படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.