Actor Vadivelu: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்டவரா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. தன்னுடன் இருப்பவர்கள் தன்னை தாண்டி சென்று விடக்கூடாது என்ற ஒரு குணத்துடன் இருப்பவர்தான் இந்த வைகை புயல். பல பிரபலங்கள் இது குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கின்றனர்.
ஆனாலும் வடிவேலு நான் இப்படித்தான் என்ற ரீதியில் அட்ராசிட்டி செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் இணைந்து நடித்த பாவா லட்சுமணன் மருத்துவ செலவுக்காக அவதிப்பட்டு வரும் செய்திகள் வீடியோவை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது.
Also read: சர்க்கரை நோய் மாத்திரை வாங்கக்கூட வழியில்லாத நடிகர்.. மீண்டும் கொடூர முகத்தை காட்டும் வடிவேலு.!
அதைத்தொடர்ந்து வடிவேலு அவருக்கு ஏதாவது பண உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பே போண்டாமணி உள்ளிட்ட பலர் இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்த போது வடிவேலு அவர்களை கண்டு கொள்ளவில்லை. அதேபோல்தான் பாவா லட்சுமணன் விஷயத்திலும் அவர் சைலண்ட் மோடில் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் விஜய் டிவி பிரபலமான KPY பாலா அவரை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த பண உதவியை செய்து நலம் விசாரித்திருக்கிறார். இந்த செய்தி தான் இப்போது பலரையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது பாவா லட்சுமணனை நேரில் சந்தித்த பாலா 30 ஆயிரம் ரூபாயை மருத்துவ செலவிற்காக கொடுத்திருக்கிறார்.
Also read: தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்
மேலும் நான் ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாகத் தான் இருந்தேன். ஆனால் என்னுடைய பேங்க் அக்கவுண்டில் 32,000 தான் இருந்தது. பெட்ரோல் செலவிற்காக 2000 ரூபாயை வைத்துக் கொண்டு மீதி பணத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன், தப்பா எடுத்துக்காதீங்க என்று கூறினார். இந்த வீடியோ இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர். ஏற்கனவே பாலா கஷ்டப்பட்டு படிக்கும் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சக நடிகருக்காக இவர் ஓடோடி வந்து உதவி இருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Also read: மிக பெரிய எதிர்பார்ப்பு, உதயநிதிக்கு வந்த தலைவலி.. மொத்தமும் புட்டுக்குன்னு போன மாமன்னன்