வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் கொண்ட தொடங்கப்பட்ட இந்த சீசனில் முதல் வாரமே வையல் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி களம் இறங்கினார்.

இந்நிலையில் முதல் வார எலிமினேஷனில் சாந்தி வெளியேறினார். இதற்கு முன்னதாகவே தனது குழந்தையை பிரிந்து இருக்க முடியாத காரணத்தினால் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்தடுத்த எலிமினேஷனில் அசல், செரினா ஆகியோர் வெளியேறினர்.

Also Read : யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், பஜாரியை அடித்து துரத்தும் பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்

இந்த வாரம் விஜே மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார். பிக் பாஸ் டிஆர்பியை ஏற்றுவதற்காக பக்கா பிளான் செய்து ஒரு தரமான ஆளை விஜய் டிவி இறக்க உள்ளது. அதாவது ரசிகர்களை அதிகம் கவர்ந்த விக்ரமன் ஒரு ஊடகத்தில் இருந்து தான் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அதேபோல் ஊடகத்துறையைச் சேர்ந்த விஜே பார்வதி வையல் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டில் நுழைய உள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தனது ஊடகத்தின் வாயிலாக பொது மக்களிடம் சுலபமாக பழகும் வாய்ப்பை விஜே பார்வதி பெற்றுள்ளார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி கதறவிட்ட ஆண்டவர்.. பறிக்கப்பட்ட வெற்றி, தரமான சம்பவம்

மக்களின் கருத்து எப்படி இருக்கும் என்பதை இவர் உணர்ந்துள்ளதால் பிக் பாஸ் வீட்டில் மிக சாதுரியமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து பல முறை பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

விஜே பார்வதியின் என்ட்ரி பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பேராதிச்சியை ஏற்படுத்த உள்ளது. கண்டிப்பாக இவர் வாய் துணுக்குடன் பேசி பிக் பாஸ் டிஆர்பியை ஏற்றுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிக விரைவில் பார்வதி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 கடைசி 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. இப்பவும் தில்லாலங்கடி வேலையை கையாளும் விஜய் டிவி

Trending News