வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிக்கென சிறிய உடையில் பேபி டால் போல் நடனமாடிய டிடி..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர். இவரது சகோதரி தேவ தர்ஷினியும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் தான்.

திவ்ய தர்ஷினி 2014ல் இவரது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் 2017ல் இருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் நளதயமந்தி, விசில், பவர் பாண்டி உட்பட சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் டிவியில், நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அதில் படம் குறித்து மட்டுமல்லாமல் நயன்தாராவின் தனிப்பட்ட சில விஷயங்களையும் ரசிகர்களுக்காக கேட்டு வாங்கியிருந்தார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் நடனமாடும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹிந்தி பாடல் ஒன்றிற்கு தொடை தெரிய சிக்கென சிறிய உடை அணிந்து நடனமாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில், ஷோவும் நல்ல வந்துச்சு, இந்த ரீலும் நல்லா வந்துச்சு, அதனால இப்போ இது இன்ஸ்டாக்கு வந்துச்சு என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்சமயம் திவ்யதர்ஷினி விக்ரமுடன் துருவ நட்சத்திரம், மற்றும் தெலுங்கில் ரொமான்டிக் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News