செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ட்ரெண்டிங் ஜோடியை தூக்கிய விஜய் டிவி.. கலைகட்டிய பிக் பாஸ் சீசன் 6

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா போன்ற நெடுந்தொடர் கிளைமேக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே போட்டியாளர்களை வைத்து இந்த சீசன் எப்படி செல்லும் என்பதை ரசிகர்கள் கணித்து விடுவார்கள்.

அந்த வகையில் வனிதா கலந்து கொண்ட சீசன் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருந்தது. இதனால் வனிதா போன்று சர்ச்சையான நபர்களைத் தேடி பிடித்துள்ளது விஜய் டிவி. முதலாவதாக இமானின் முன்னாள் மனைவி இந்நிகழ்ச்சி கலந்து கொள்வதாக செய்திகள் வெளியானது.

Also Read :வத்திக்குச்சி வனிதாவை வைத்து காய் நகர்த்தும் விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 உறுதியான போட்டியாளர்

இந்த சூழலில் ஒரு காலகட்டத்தில் வனிதாவின் காதலராக இருந்த நடன இயக்குனர் ராபர்ட் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளதாக உறுதிபட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாதம் தொடக்கத்திலேயே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ரவீந்தர், மகாலட்சுமி திருமணம் தான்.

இணையத்தில் மிகவும் பேசுபொருளாக மாறியது இவர்களது திருமணம். அதுமட்டுமின்றி பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருந்தனர். இவர்களால் கண்டிப்பாக கன்டென்ட் கிடைக்கும் என்பதற்காக விஜய் டிவி ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரையுமே தேர்வு செய்து உள்ளார்களாம்.

Also Read :வனிதாவால் சினிமா மீது வந்த அருவருப்பு.. 2 வருடமாக பட வாய்ப்பை நிராகரிக்கும் நடிகை

மேலும் வனிதாவை பற்றி ஏகப்பட்ட விஷயங்களை போட்டு உடைத்துள்ளார் ரவீந்தர். அதுமட்டுமின்றி வனிதாவின் காதலர் ராபர்ட்டும் இதில் கலந்து கொள்வதால் கண்டிப்பாக சம்பவம் இருக்கிறது. கடந்த ஐந்து சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ரிவ்யூ கொடுத்து வந்தார் ரவீந்தர்.

இந்த சீசன் அவரே தனது மனைவியுடன் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதுமன ஜோடிகள் ஆன ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதால் இப்போது இந்த சீசன் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இது குறித்து உறுதியான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

Also Read :ரவீந்தர்- மகாலட்சுமியின் அநாகரீக பேட்டி.. கோபத்தில் கொந்தளித்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பிரபலம்

Trending News