ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

மணிமேகலை vs பிரியங்கா, மோதி கொண்ட தொகுப்பாளினிகள்.. விஜய் டிவிக்கு விழுந்த பெரிய அடி

VJ Manimeghalai: பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். அப்படி ஒரு விஷயம் தான் விஜய் டிவிக்கு நடந்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சேனல் மீது மக்களுக்கு கடந்த சில காலங்களாக பெரிய அளவில் அபிப்பிராயம் இல்லை.

இதற்கு காரணம் இந்த சேனலின் ஒரு சில சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாரபட்சம் பார்க்கிறார்கள் என்பது மக்களின் பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் விஜய் டிவியின் பெயரை டேமேஜ் ஆகிவிட்டது. போட்டியாளர்களுக்கிடையேதான் பாரபட்சம் பார்க்கிறார்கள் என்று பார்த்தால் கடைசி எண் அவர்களுக்காக உயிரைக் கொடுத்து வேலை செய்யும் தொகுப்பாளர்கள் இடையே பாரபட்சம் நடந்திருக்கிறது.

ஒரு காலத்தில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளிகளாக இருந்தவர்கள் தான் டிடி, ரம்யா, பாவனா. இந்த மூன்று பேரும் இருக்கும்போது விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் ஸ்டைல் வேறு மாதிரி இருந்தது.

விஜய் டிவிக்கு விழுந்த பெரிய அடி

அதன் பின்னர் சேனலுக்குள் வந்து ஆதிக்கம் செலுத்தியவர்கள் தான் மாகாபா மற்றும் பிரியங்கா. இவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளின் ஸ்டைல் மொத்தமாக மாறிவிட்டது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு லவ் டிராக் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் இருக்காது.

இதனாலேயே பாதி பேருக்கு இந்த நிகழ்ச்சி மீது வெறுப்பு வந்தது. தற்போது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் தொகுப்பாளினை மணிமேகலை நேற்று ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதில் பிரியங்கா தன்னை வேலை செய்ய விடாமல் ஆதிக்கம் செலுத்தியதாகவும், இது சேனலுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிரியங்கா விடம் தயவு பண்ணி போனால் தான் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் கிடைக்கும் என எனக்கு நேரடியாக அறிவுறுத்தப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.

மணிமேகலைக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது இவர்களுடைய மொத்த வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறது விஜய் டிவி. அது மட்டும் இல்லாமல் பிரியங்கா மீது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே ஒரு சிலரை கோபம் இருந்து வந்தது.

தற்போது மணிமேகலை வெளிப்படையாகவே குற்றம் சாட்டி இருப்பதால் பிரியங்கா பலரது வெறுப்பையும் சம்பாதிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இனி பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான்.

ஆரம்பத்திலேயே இவர்களுடைய பிரச்சனையை விஜய் டிவி என்ன என்று இறங்கி பார்த்திருக்க வேண்டும். அதை தவறவிட்டதால் இப்போது மொத்தமும் டேமேஜ் ஆகி நிற்கிறது.

அதுவும் குக் வித் கோமாளி செமி பைனல் நடக்க இருக்கும் நிலையில் இந்த விஷயம் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

பிரியங்கா மனசு வச்சா தான் விஜய் டிவியில் இருக்க முடியும்

Trending News