செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வத்திக்குச்சி வனிதாவை வைத்து காய் நகர்த்தும் விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 உறுதியான போட்டியாளர்

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டும் உலகநாயகன் கமலஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் யார் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற பெயர் பட்டியில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது உறுதிப்பட ஒருவரின் பெயர் வெளியாகி உள்ளது. அதாவது வனிதா கலந்து கொண்ட சீசன் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. அந்த சீசனில் அதிகப்படியான சர்ச்சைக்கு காரணமாக வனிதா தான். இதனால் இவருக்கு வத்திக்குச்சி வனிதா என்று பட்டம் கொடுத்தனர்.

Also Read :கிராண்ட் ஃபினாலே உடன் துவங்கப்படும் பிக் பாஸ் சீசன் 6.. ஊத்தி மூடப்பட்ட புத்தம்புது சீரியல்

அதன் பின்பு வனிதாவை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தனர். ஏனென்றால் வனிதா கலந்து கொண்டால் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறும் என்பது விஜய் டிவிக்கு நன்றாக தெரிந்தது. இந்நிலையில் இந்த சீசனில் வனிதாவுக்கு மிகவும் நெருக்கமான நபர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு தெலுங்கானாவைச் சேர்ந்த ஆனந்த் ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

Also Read :பிக் பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 300 எபிசோடுகளிலேயே மூட்டை கட்டிய இயக்குனர்

இந்நிலையில் இவருடனும் சில கருத்து வேறுபாடு ஏற்பட வனிதா ஒரு படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது வனிதா மற்றும் ராபர்ட் இடையே காதல் மலர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி வனிதா மூன்றாவது முறையாக ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் அது பொய் என ராபர்ட் கூறியிருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் ராபர்ட்டை விஜய் டிவி தேர்வு செய்துள்ளது. இதனால் வனிதாவை பற்றிய பல செய்திகள் ராபர்ட் கூறுவார் என்றும் அதனால் டிஆர்பி எகிறும் என்று விஜய் டிவி திட்டம் போட்டுள்ளது.

Also Read :பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

Trending News