விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகள் அனைத்தும் சின்னத்திரை ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைக்கும். அதிலும் விஜய்டிவியின் முன்னணி தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து சூப்பர் சிங்கர், தி வால், சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து தொகுத்து வழங்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட் எனும் அளவுக்கு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். ஆனால் சில மாதங்களாக பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு, மாகாபா ஆனந்த்-பிரியங்கா ஜோடியை எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
Also Read: விரைவில் பிரியங்கா வீட்டுக்கு வரப்போகும் புது வரவு
ஆனால் தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ‘ஊம் சொல்றியா ஊஹூம் சொல்றியா’ என்ற புஷ்பா படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வரிகளில் ‘Oo Solrya Oohm Solriya Yes or Miss’ என்ற டைட்டிலுடன் வித்யாசமான கேம்ஸ் ஹோ ஒன்றை தொகுத்து வழங்க போகின்றனர்.
இவர்கள் இருவரும் நிகழ்ச்சியை தாண்டி சிறந்த நண்பர்களாக இருப்பதால் இவர்களுக்கு இடையே இருக்கும் புரிதல் காரணமாக ஒரே நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து, நிகழ்ச்சியைப் பார்க்க கூடிய ரசிகர்களை கலகலப்புடன் வைத்திருக்கின்றனர்.
Also Read: ஒரு எபிசோடுக்கு பிரியங்கா வாங்கும் சம்பளம்
இந்த புத்தம் புது கேம் ஷோவில் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்த போகிறார். மிகவும் கலகலப்பாகவும் கேலி கிண்டலுடன் இருக்கப்போகும் இந்த நிகழ்ச்சி வரும் வாரங்களில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மற்ற எந்த சேனல்களும் செய்ய முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் விஜய் டிவி துவங்கும் அனைத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் சன் டிவி உள்ளிட்ட மற்ற சேனல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது.
Also Read: ஒரே நிகழ்ச்சியில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற விஜய் டிவி பிரபலங்கள்