வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

விஜய் டிவி ஆபீஸ் சீரியல் புகழ் நடிகை மதுமிளாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா? வைரலாகும் புகைப்படம்

அது என்னமோ தெரியவில்லை, ஆயிரம் தொலைக்காட்சிகளில் ஆயிரம் சீரியல்கள் ஒளிபரப்பினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் எங்க இருந்துதான் திடீரென அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிறது என்றே தெரியவில்லை.

அப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்த மதுமிளாவுக்கு அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. முன்னதாக அவர் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு பின்னர் நேரடியாக விஜய் டிவியில் சீரியல் மூலம் நுழைந்தார்.

அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு ஆண்டுகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மதுமிளா ஒரு இலங்கை வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக தொலைக் காட்சிகளில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டு தற்போது கணவருடன் தன்னுடைய இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார். மதுமிளா திடீரென சீரியலை விட்டுப்போனது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

mathumila-latest-photo
mathumila-latest-photo

தற்போது அதைவிட பேரிடியாக அமைந்தது அவரது லேட்டஸ்ட் குழந்தையின் புகைப்படம். பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கும் மதுமிளாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தை இருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

sausha-madhumila-daughter
sausha-madhumila-daughter

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிளா அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய மகள் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் மதுமிலா. இந்த புகைப்படத்திற்கு செம்ம லைக்குகள் குவிந்து வருகிறது.

Trending News