ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வந்தாச்சு புது பிக் பாஸ், சீசன் 8 தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா?. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சேனல்

Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் இருந்து கமல் தொகுத்து வழங்கப் போவதில்லை என புரளி வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் ஆண்டவர் வெற்றி கரமாக ஏழு சீசன்களை தொகுத்து வழங்கி விட்டார்.

வழக்கம் போல எட்டாவது சீசன் ஆரம்பிக்கும் நிலையில் கமலஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக வழக்கம் போல செய்திகள் வெளியானது.

அதிகாரப்பூர்வமாக அறிவித்த சேனல்

யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த முறை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என பெரிய கேள்வி எல்லோருக்குமே இருந்தது.

சிம்பு, நயன்தாரா, சரத்குமார், பார்த்திபன் நிறைய பெயர்கள் அடிபட்டது. ஒரு வழியாக விஜய் சேதுபதி இல்லை என்றால் நயன்தாரா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்று மதியம் விஜய் டிவி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என அறிவிக்க போவதாக சொல்லி இருந்தது.

அதன்படி சரியாக 6 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி அறிவித்துவிட்டது. பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்.

விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார், அவருடைய ஸ்டைலுக்கு இந்த நிகழ்ச்சி சரியாக இருக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News