சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பிரியங்காவை சமரசம் செய்ய பிளான் பண்ணிய விஜய் டிவி.. ஜாக்குலினுக்கு விரித்த வலை, வச்சு செய்யும் ரக்சன்

Vijay Tv Cook with Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை எந்தவித போட்டி பொறாமையும் இல்லாமல் மக்களை பொழுதுபோக்கும் விதமாக சிவாங்கி, புகழ், பாலா, சுனிதா மற்றும் குரேசி இவர்கள் காம்போ அனைத்தும் டாப் டக்கராக அமைந்தது. ஆனால் இந்த சீசனில் சிவாங்கி பாலா இல்லாமல் சற்றும் போர் அடிக்கும் விதமாக அமைந்தது. அதிலும் வெங்கட் பட் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்தது.

இதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக இந்த சீசனை பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜை ஜட்ஜ் ஆக கூட்டிட்டு வந்தார்கள். அத்துடன் பிரியங்கா வந்தால் அந்த நிகழ்ச்சி வெற்றியாக மக்களிடத்தில் நிலைத்து இருக்கும் என்பதற்காக பிரியங்காவையும் கூட்டிட்டு வந்தார்கள். ஆனால் இந்த சீசன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதபடி தலைகீழாக மாறிவிட்டது.

பிளான் பண்ணி காய் நகர்த்தும் விஜய் டிவி

அதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி பிரியங்காவின் அதிகாரம் ஓங்கி இருந்ததோ, அதேபோல் குக் வித்து கோமாளி சீசனிலும் பிரியங்காவிற்கு ஓவராக இடம் கொடுத்து எல்லா விஷயத்திலும் மூக்க நுழைக்க ஆரம்பித்தார். இதனால் வெடித்துப்போன மணிமேகலை பாதியிலேயே விலகி விட்டார். தற்போது இவர்களுடைய பஞ்சாயத்து பூகம்பமாக வெடித்து வரும் நிலையில் விஜய் டிவி அவருடைய பங்குக்கு மணிமேகலை மேல்தான் தவறு இருக்கிறது.

பிரியங்கா மீது எந்த தவறும் இல்லை என்பதற்கு ஏற்ப புரோமோவை வெளியிட்டு பிரியங்காவிற்கு சொம்பு தூக்கி வருகிறார்கள். போதாதருக்கு பிரியங்கா இந்த ஒரு விஷயத்தால் நொந்து போய் இருப்பதால் அவரை சமரசம் செய்யும் விதமாக சாந்தப்படுத்தும் நிலைமைக்கு விஜய் டிவி வந்துவிட்டது. அந்த வகையில் ரக்சன் பக்கத்தில் தொகுத்து வழங்கும் விதமாக புகழ் மற்றும் விடிவி கணேஷ் வைத்து கிண்டல் அடித்து வருகிறார்கள்.

போதாதற்கு சிறந்த சமையல் போட்டியாளர் என்கிற விருதையும் வழங்கும் விதமாக பிரியங்காவிற்கு பரிசுகளை கொடுத்து கவுரவப்படுத்துகிறார்கள். என்னதான் பிரியங்காவின் சமையல் நன்றாக இருந்தாலும் இவரை விட சமைக்கக்கூடிய திறமையாளர்கள் நிறைய பேர் இருக்கும் பட்சத்தில் விஜய் டிவி இந்த முடிவை எடுத்தது முழுக்க முழுக்க பிரியங்காவிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த சீசனில் மக்கள் வெறுப்பை கொட்டி வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு இறுதிச்சுற்றை சிறப்பாக அமைக்க வேண்டும் என்பதற்காக மெய்யழகன் டீமை கூட்டிட்டு வரும் வகையில் அரவிந்த்சாமி, கார்த்திக் மற்றும் ராதா போன்ற ஆர்டிஸ்ட்களை சிறப்பு விருந்தினராக கூட்டிட்டு வருகிறார்கள்.

அடுத்ததாக இனிவரும் குக் வித்து கோமாளி சீசனை ரக்சன் உடன் சேர்ந்து தொகுத்து வழங்குவதற்கு ஜாக்குலின் சரியான தொகுப்பாளராக இருப்பார் என்று அவரிடம் பேசலாம் என்று விஜய் டிவி முடிவெடுத்து இருக்கிறது. அந்த வகையில் அடுத்து வரும் ஒவ்வொரு சீசனிலும் ரக்சன் உடன் ஜாக்குலின் தொகுத்து வழங்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் பிரியங்கா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Trending News