வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யாஷிகாவை வைத்து டிஆர்பி ஏற்ற பிளான் போடும் விஜய் டிவி.. நியூ இயருக்கு நல்லா பண்றாங்கப்பா

புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து சின்னத்திரை சேனல்களும் ரசிகர்களை கவர்வதற்கு பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ரெடியாக உள்ளது. அதிலும் விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்களை வைத்து வேர் இஸ் த பார்ட்டி என்ற ஸ்பெஷல் எபிசோடை ஒளிபரப்ப உள்ளது.

அதில் நடிகை யாஷிகா, கேப்ரில்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதற்கான புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தொகுப்பாளராக இருக்கும் தீனா, யாஷிகாவிடம் 2021 ல் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது என்று கேட்கிறார்.

கடந்த ஜூன் மாதம் யாஷிகா மிகப்பெரிய விபத்து ஒன்றினால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார். இந்த நிகழ்வைப் பற்றி பேசிய யாஷிகா, மருத்துவமனையில் தான் பட்ட கஷ்டங்களை விஜய் டிவி மேடையில் பகிர்ந்து கொண்டார்.

அந்தக் கோரமான விபத்தில் அவர் தன்னுடைய நெருங்கிய தோழியை இழந்தார். தன்னுடைய தோழி தன்னை விட்டு பிரிந்ததாகவும், தனக்கு நல்லதை மட்டுமே செய்த அந்த தோழி தன்னால்தான் உயிரிழந்ததாகவும் மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.

மேலும் அவர் உயிரிழந்தது தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதாகவும், அதனால் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பதாகவும் அழுது கொண்டே கூறினார். அவரின் இந்த அழுகையை பார்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.

யாஷிகாவிற்கு நடந்த இந்த விபத்தை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருந்தும் மேடையில் அவரிடம் அந்த பழைய நிகழ்வை நினைவூட்டுவது போல ஒரு கேள்வியை கேட்டு அவரை அழ வைத்து விட்டது விஜய் டிவி. சேனல் டிஆர்பி ஏற்றுவதற்காக இப்படியெல்லாமா செய்வாங்க என்று ரசிகர்கள் பலரும் விஜய் டிவியை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.

தற்போது இந்த வீடியோவிற்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட் வருவதால் விஜய் டிவி அந்த ப்ரோமோ வீடியோ வை நீக்கிவிட்டது.

Trending News