திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

மாடர்ன் சொர்ணாக்கா பிரியங்காவின் அரசியல்.. அப்ப புரியல இப்ப புரியுது, உண்மையை உடைத்த நண்பன்

VJ Priyanka: விஜய் டிவி டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது அனைவரும் அறிந்தது தான். அதேபோல் பாராபட்சமாக நடந்து கொள்வதிலும் சேனல் கில்லாடி. அதுதான் பிரியங்கா, மணிமேகலை விவகாரத்திலும் நடந்துள்ளது.

அது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக தான் அனைவரும் பேசி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் விஜய் டிவியில் இருக்கும் பிரபலங்கள் கூட தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இத்தனை நாள் பிரியங்கா மீது இருந்த ஒரு அபிப்ராயம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. அதில் பலரும் அவரை மாடர்ன் சொர்ணாக்கா, திமிர் பிடித்தவர், தலைகனம் அதிகம் என கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதேபோல் பிரியங்கா இப்படிப்பட்டவர் தான் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் ஏற்கனவே வெளிப்படையாக சொல்லியிருந்தார். அதில் அவர் உனக்கு ஒருத்தவங்கள புடிக்கலனா பிரச்சனை இருந்தா அவங்கள காலி பண்ணாம விட மாட்ட. அவங்கள சாக்கடையில் தள்ளி குழிதோண்டி புதைச்சிடுவ இதுதான் உன்னோட குணம்.

உண்மையை உடைத்த நண்பன்

நீ ஒரு சுயநலவாதி ராட்சசி என திட்டி இருப்பார். அந்த வீடியோவை தற்போது வைரல் செய்து வரும் ரசிகர்கள் அப்ப புரியல இப்ப புரியுது. நிரூப் சொன்னது 100 சதவீதம் உண்மைதான் பிரியங்காவின் குணம் இப்படிப்பட்டது தான்.

அதனாலேயே கேவலமான அரசியல் செய்து மணிமேகலையை வெளியில் அனுப்பி இருக்கிறார் என கொந்தளித்து வருகின்றனர். ஆனாலும் சிலர் பிரியங்கா மீது மணிமேகலைக்கு பொறாமை அதனால் தான் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் மணிமேகலையின் முடிவு தான் சரியானது. காசு பணத்திற்காக தன்மானத்தை இழக்க முடியாது. இனிமேலாவது விஜய் டிவி இந்த ஆதிக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் சரிதான்.

வெளிவந்த பிரியங்காவின் உண்மை முகம்

Trending News