வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

புலிக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாத சின்ன தம்பி.. விஜய் டிவி புகழின் MR. ZOO KEEPER ட்ரெய்லர்

MR. ZOO KEEPER Trailer: காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதன்படி விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் MR. ZOO KEEPER படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஜே சுரேஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இமான் அண்ணாச்சி, எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு தெய்வமகள் விக்ரம் கெட்டப்பில் இருக்கும் புகழ் பூனை குட்டி என்று நினைத்து புலியை வீட்டுக்குள் வைத்து வளர்த்து வருகிறார்.

Also read: எம்ஜிஆருக்கு ஒருபடி மேலே போன கேப்டன் புகழ்.. சமாதியில் செய்யப்படும் தரமான சம்பவம்

புலிக்குட்டியை காணாமல் போலீஸ் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. மறுபக்கம் புகழ் புலிக்கு புட்டியில் பால் கொடுப்பது என அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது பூனை இல்ல புலி என தெரியும் போது அவர் பல பிரச்சனைகளுக்கு ஆளாவது போல் ட்ரெய்லர் செல்கிறது.

நாம வளர்த்தது பூனை இல்ல புலிடா, புலிக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாத சின்னத்தம்பியா நீ, ஆம்பள பூனை லேட்டா தான் பேசும் போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கிறது. மேலும் புலி குட்டிக்கு சுப்பிரமணி என பெயர் வைத்திருப்பது லியோ பட ஹைனாவை நினைவுபடுத்துகிறது.

Also read: பாலா மட்டும் தான் உதவி செய்வானா.! வரிஞ்சு கட்டிட்டு வந்த புகழ்.. விஜயகாந்த் சமாதியில் எடுத்த சபதம்

இப்படியாக செல்லும் ட்ரெய்லரில் புகழின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. அதேபோல் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தும் கவனம் ஈர்க்கிறது. ஆக மொத்தம் சந்தானம், சூரி, யோகி பாபு வரிசையில் ஹீரோவாகி இருக்கும் புகழ் இப்படத்தின் மூலம் வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News