சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குளியலறை காட்சியில் சீரியலா.? முகம் சுளிக்க வைக்கும் விஜய் டிவி

தற்போது சினிமாவை தாண்டி சீரியலிலும் எல்லை மீறிய காட்சிகள் வைக்கப்படுகிறது. அதிலும் சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் முகம் சுளிர்க்கும்படியான காட்சிகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரில் ஆதி, ஜெசி இடையே முத்த காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு சீரியலில் குளியலறை காட்சியை வைத்துள்ளார் இயக்குனர்.

Also Read :பேரன், பேத்தி எடுக்கிற வயசுல விவாகரத்தா.. செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் மாமியார்

கூட்டுக் குடும்பமாக அமர்ந்து பார்க்கும் சின்னத்திரை தொடர்களில் இது போன்ற காட்சிகள் வைப்பது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. விஜய் டிவியில் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிப்பிக்குள் முத்து.

இத்தொடரில் தங்கை காதலித்த வரை மணம் முடிப்பதற்காக அக்கா தன் வாழ்க்கையை பாழாகிக் கொள்வதே மையகதை. இதில் வாணி என்பவர் மனநலக் குன்றிய ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்பு வாணி மீது அதீத அன்பு வைக்கிறார் ஆகாஷ்.

Also Read :மகன் செய்த சில்மிஷ வேலை.. ஊர் முன்னாடி மருமகளிடம் அசிங்கப்பட்ட சிவகாமி

இந்த தொடர் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர் விரும்பும் படியாக அமைந்துள்ளது. மேலும் ரசிகர்கள் இத்தொடரை இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். தற்போது குளியல் அறையில் வாணி, ஆகாஷ் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளது.

சீரியலில் இதுபோன்று குளியலறை காட்சியா என இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் தற்போது முகம் சுளித்துள்ளனர். டிஆர்பிக்காக விஜய் டிவி இது போன்று தொடர்ந்து செய்து வருவது இந்த தொலைக்காட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

sippikkul-muthu

Also Read :படுக்கை அறை காட்சியில் எல்லை மீறும் ராஜாராணி2 ஜோடி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!

Trending News