ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ராட்சசி ஜோதிகாவாக மாறிய விஜய் டிவி ராஜலட்சுமி.. லைசென்ஸ் ட்ரெய்லர் எப்படி இருக்கு? தேறுமா?

விஜய் டிவிக்கு ஒருவர் வந்துவிட்டாலே நிச்சயம் அவர் சினிமாவில் பிரபலமாகி விடுவார். இதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயன், கவின் உட்பட எத்தனையோ நபர்களை சொல்லலாம். அந்த ஆசையிலும், நம்பிக்கையிலும் தான் பல பிரபலங்கள் சினிமா கனவுகளுடன் அடி எடுத்து வைக்கின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளார். முதல் படத்திலேயே லீட் ரோலில் இவர் நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள ட்ரெய்லரும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

Also read: புரட்சிப் பெண் ஜோதிகாவை வலைவீசி தேடும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

அவ்வாறாக இந்த ட்ரெய்லர் பெண் குழந்தைகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் பிரச்சனையை மையப்படுத்தி ஆரம்பிக்கிறது. அதைத்தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியராக வரும் ராஜலட்சுமி துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு லைசென்ஸ் வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இது ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்து சோசியல் மீடியாவிலும் பிரபலம் ஆகிறது. அதை தொடர்ந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்புகிறது.

இவ்வாறு விறுவிறுப்பாக செல்லும் இந்த ட்ரெய்லரில் நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதை பார்க்கும் போது அவர்களின் கையிலேயே துப்பாக்கியை கொடுக்கலாம் என்பது போன்ற வசனங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறது. இப்படி முக்கிய பிரச்சனை கையில் எடுத்திருக்கும் இந்த படம் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also read: 160 கோடி வசூல் சாதனை, கேரளாவை உலுக்கிய 2018 உண்மை சம்பவம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

ஆனாலும் ராஜலட்சுமி இந்த கனமான கதாபாத்திரத்திற்கு பொருந்துவாரா என்ற கேள்வியையும் முன்வைக்கின்றது. ராட்சசி பட ஜோதிகா ஸ்டைலில் களம் இறங்கியுள்ள இவர் நடை, உடை ஆகியவற்றில் அவர் போல் பிரதிபலித்தாலும் நடிப்பு அவருக்கு வரவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவர் பேசும் வசனம், முகபாவனைஇரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதது போல் தான் இருக்கிறது.

அந்த வகையில் முதல் படத்திலேயே இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்திருக்கும் பட்சத்தில் அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. அதன் காரணமாகவ படம் தேறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் படம் வெளிவந்தால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News