வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

Vj Rakshan: விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்சன் இப்போது வெள்ளி திரையில் சில படங்களில் நடித்து வருகிறார். அதுவும் துல்கர் சல்மானுடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவர் அடித்த லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஒரு பக்கம் சினிமா வாய்ப்பு வந்தாலும் விஜய் டிவியையும் கெட்டி ஆக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதன்படி குக் வித் கோமாளி போன்ற சில ரியாலிட்டி ஷோக்களை ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பிரியங்கா பங்கு பெற்றார். இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

Also Read : பிக் பாஸ் சீசன் 7-க்கு கமல் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா! ஒரு படத்தோட மொத்த பட்ஜெட்

இந்த சீசனில் ரக்சன் போட்டியாளராக கலந்து கொள்வார் என தகவல் வெளியானது. இப்போது பிக் பாஸ் வாய்ப்பு வந்தாலும் தனக்கு வேண்டாம் என்று விஜய் பட நடிகையுடன் நடிக்க கிளம்பி விட்டாராம். அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கண்ணிவெடி என்ற படம் உருவாக இருக்கிறது. இன்று இதற்கான பூஜை போடப்பட்டுள்ளது.

இப்படத்தை கணேஷ் ராஜ் இயக்க இருக்கிறார். விஜயுடன் சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடி போட்ட நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். தமிழில் சிறிது பிரேக் எடுத்த நிலையில் மீண்டும் கண்ணிவெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரக்சனுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.

Also Read : கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7.. நாள் குறித்த விஜய் டிவி

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்த தான். இப்போது நேரடியாகவே வெள்ளித்திரையில் ரக்சனுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் கீர்த்தி சுரேஷின் படத்தில் என்றால் சொல்லவா வேண்டும். அதனால் பிக் பாஸ் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு கண்ணிவெடி படத்தில் புக் ஆகி உள்ளார்.

அதுமட்டுமின்றி பிக் பாஸில் கலந்து கொண்டால் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது. ஆனால் இந்த படத்தில் நடித்துக் கொண்டு தொகுப்பாளராகவும் பணி செய்யலாம் என்பதற்காக ரக்சன் இந்த முடிவு எடுத்துள்ளாராம். மேலும் இப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : பிக் பாஸ் ஓட அழிந்து போன புகழ்.. வெறும் பேச்சுவார்த்தையோட கமல் பேக்கப் பண்ணிய 6 பிரபலங்கள்

Trending News