திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

Ethirneechal Gunasekaran: எப்படியாவது சன் டிவியை முந்த வேண்டும் என்று விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ, காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் திறமைக்கான மேடை போன்ற அனைத்து விஷயங்களையும் சரமாரியாக இறக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் சன் டிவியை விட இவர்கள் பின்னுக்கு தான் இருக்கிறார்கள்.

அதிலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகியுள்ள எதிர்நீச்சல் சீரியல் மூலமாக மொத்த டிஆர்பி ரேட்டும் இவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த நாடகத்தின் ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். முக்கியமாக குணசேகரன் கதாபாத்திரத்தை பார்ப்பதற்கு அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்.

Also read: 8000 பேர் உயிரைக் காப்பாற்றும் விஜய் டிவி பிரபலம்.. இதுவும் ஒருவிதமான போதை தான்

அதனால் இவரை எப்படியாவது நம்ம பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று பல முயற்சிகளில் விஜய் டிவி ஈடுபட்டது. ஆனாலும் கடைசி வரை குணசேகரன் வேறு எந்த நாடகத்திலும் நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் தற்போது விஜய் டிவி பிளான் பண்ணி குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி விட்டார்கள்.

அதாவது காமெடி ஷோ மூலம் குணசேகரன் விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்க போகிறார். பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் சீசன் 4 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும். இதில் 2 டீம் ஆக பிரிந்து மொத்தம் ஆறு பேர் பங்கேற்பார்கள். இதில் தற்போது குணசேகரன் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய அம்மாவாக நடிக்கும் விசாலாட்சியும் கலந்து கொள்கிறார்கள்.

Also read: வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

இதில் குணசேகரனை பார்க்கும் பொழுது இத்தனை நாளாக எல்லாத்தையும் ஆட்டி படைத்த உங்களை தற்போது பாட்டின் மூலம் டிஜே பிளாக் கலாய்ப்பது அப்பாட்டமாக தெரிகிறது. முக்கியமாக இவரை காமெடியாக பாவித்து அனைவரும் சிரிக்கும் படியாக பிரியங்கா ஒவ்வொன்றையும் வச்சு செய்கிறார்.

கடைசியில் நம்மளை கலாய்க்கிறார் என்று உணர்ந்த குணசேகரன் ஏன் இந்த அம்மா என்ற தோரணையில் யார கலாய்க்கிற என்று அதட்டுகிறார். என்கிட்டயா கொஞ்சம் பார்த்து பாட்டை போடுங்க என்று தோரணையாக பேசுகிறார். உடனே அங்கே இருந்து அதற்கும் பதிலாக நான் இல்லைங்க மன்னிச்சிடுங்க என்று குரல் எழும்புகிறது. ஆக மொத்தத்தில் பிரியங்கா, குணசேகரன் சார் வந்து இருக்காங்க கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க.

Also read: சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்

Trending News