வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காதல் திருமணத்தில் அடுத்த விஜய் டிவி நடிகை நட்சத்திரா.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

சின்னத்திரையில் க்யூட்டான தொகுப்பாளினியாக வலம் வருபவர் நட்சத்திரா. இவர் தற்போது தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் தான் நட்சத்திரா முதன் முதலில் நடிக்க தொடங்கினார்.

இதில் வாணி ராணி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே அதிக பிரபலம் அடைந்தார். குறிப்பாக குஷ்பூ நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியளில் முதன்மை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதில் நடித்த பிறகு அவர் ரசிகர்களால் பஞ்சுமிட்டாய் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நட்சத்திரா நடித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக ராகவ் என்பவரை காதலித்து வந்தார். தற்போது இவருக்கும் ராகவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்த அவருடைய காதலை நட்சத்திரா யாரிடமும் பகிராமல் ரகசியமாக பாதுகாத்து வந்துள்ளார். தற்போது அவரின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின் தற்போது காதல் திருமணம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தன் வருங்கால கணவருடன் இதுவரை எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நட்சத்திரா தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.  கடந்த சில நாட்களாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விரைவில் திருமணம் ஆகப்போகும் நட்சத்திராவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நட்சத்திரா சின்னத் திரையில் மட்டுமல்லாது, பெரிய திரையிலும் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர என் இனிய பொன் நிலாவே என்ற ஷார்ட் பிலிமில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

nakshathra-engagement
nakshathra-engagement

Trending News