வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அடுத்தடுத்து விஜய் டிவி நடிகைகளை தூக்கும் பிரபல சேனல்.. லிஸ்டில் இணைந்துள்ள அடுத்த பிரபலம்

பொதுவாக சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இப்படி ஏராளமான ரசிகர்களை கொண்ட அந்த நடிகைகளை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி தங்கள் சேனல் பக்கம் இழுக்கும் வேலையை மும்முரமாக செய்து வருகிறது. விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகள் தற்போது ஜீ தமிழ் சீரியலில் அதிகம் நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த ரக்ஷா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அன்பே சிவம் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். தற்போது அவருக்கு பதில் விஜய் டிவியின் மற்றொரு பிரபல நடிகை கவிதா நடித்து வருகிறார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்பு மீனா கேரக்டரில் நடித்தவர்.

அவரைத் தொடர்ந்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வரும் வைஷ்ணவி ஜீ தமிழின் பேரன்பு சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு விஜய் டிவி பிரபலம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள ஒரு புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் டீச்சர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதனால் கண்மணி பாரதிகண்ணம்மா சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது.

இந்நிலையில் பிரபலமாக இருக்கும் நடிகைகளும் அடுத்தடுத்து மற்றொரு சேனலுக்கு செல்வதால் விஜய் டிவியின் டிஆர்பி இன்னும் சரிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் விஜய் டிவி நிர்வாகம் ரசிகர்களை கவர பல புதுமையான நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் அறிமுகப்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Trending News