வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. கொளுத்திப் போட தயாரான கமல்

கடந்த ஐந்து சீசன்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸின் அடுத்த சீசன் எப்போது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

பிக்பாஸ் 6 சீசனில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கிய பிரபலமான தொகுப்பாளர் ரக்சன் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்றொரு விஜய் டிவி சீரியல் நடிகையும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்.

Also Read: பிக்பாஸில் கலந்து கொள்ளும் முதல் 5 போட்டியாளர்கள்.. இரண்டு விவாகரத்து பிரபலங்களை தட்டி தூக்கிய விஜய் டிவி

முதல் சீரியலிலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த இந்த சீரியல் நடிகை திடீரென்று சீரியலில் இருந்து விலகி, பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோக்களை நடத்தினார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவு பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது மேலும் பிரபலமடைந்து பட வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ரசிகர்களின் மனதில் பதிந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

நடந்து முடிந்த சீசன்களில் விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சிவானி, ராஜு, பிரியங்கா, கவின், ரியோ, பாவனி போன்று பிக்பாஸ் 6 சீசனில் ரோஷினி ஹரிப்பிரியானுக்குதான் தனி ஆர்மியே உருவாகப் போகிறது.

Also Read: பிக் பாஸ் 6-க்கு உறுதியான முதல் இரண்டு பிரபலங்கள்.. வாய்ப்புக் கொடுத்து வம்பு இழுக்கும் விஜய் டிவி

இவரைப் போன்றே பிக்பாஸ் சீசன் 6ல் சூப்பர் சிங்கர் பிரபலம் கிராமிய பாடகி ராஜலட்சுமி, இசையமைப்பாளர் டி இமான் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட், பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், நடிகை ஷில்பா மஞ்சுநாத், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஜீ தமிழ் சீரியலில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி, சத்யா சீரியல் புகழ் ஆயிஷா, டிக் டாக் பிரபலம் GP முத்து, டிடி போன்றோரும் கலந்து கொள்ள போகின்றனர்.

ஏற்கனவே வரும் அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கப்படும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 17 முதல் 20 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உறுதியான நிலையில், அவர்களது முழுவிவரமும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 உறுதியான 11 போட்டியாளர்கள்.. ஏஜெண்ட் விக்ரமுக்கு இவ்வளோ கோடி சம்பளமா?

Trending News