செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

Vijay Tv Serial Artist Salary: தினமும் வீட்டில் இருந்தபடியே நம் அனைவரும் பார்த்து ரசிப்பது சீரியலை மட்டும் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஏகப்பட்ட சீரியல்கள் வெற்றி நடை போட்டு வருகிறது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை இன்னும் பல தொடர்கள் மக்களின் ஃபேவரைட் ஆக பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் பேவரைட் சேனலாக விஜய் டிவி இடம் பிடித்து விட்டது.

Also read: சிவாங்கியை ஆசை காட்டி மோசம் செய்த விஜய் டிவி.. குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் இவர்தான்

தற்போது இந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளங்களை பற்றி பார்க்கலாம். அதில் பாக்கியலட்சுமி தொடரில் குடும்ப இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்யாவின் சம்பளம் ஒரு நாளைக்கு 15,000 வரை வாங்கி வருகிறார். இவர்தான் இந்த நாடகத்திற்கு பில்லர் என்பதால் இவருக்கு தான் அதிகமாக சம்பளம் கிடைத்திருக்கிறது.

அடுத்தபடியாக இந்த நாடகத்தில் கரும்புள்ளியாக இருந்து வில்லியாக நடிக்கும் ராதிகாவின் ஒரு நாள் சம்பளம் 12000 ரூபாய். மேலும் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி சன் டிவி தொலைக்காட்சியில் முன்னணி நடிகையாக நடித்துவிட்டு தற்போது விஜய் டிவியில் சரஸ்வதியாக கலக்கிக் கொண்டிருக்கும் நக்ஷத்ரா நாகேஷ் இவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு 10000 ரூபாய்.

Also read: டிஆர்பி-யை எகிற வைக்க வரும் பிக்பாஸ் சீசன் 7.. தரமான 10 போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி

அடுத்ததாக இந்த நாடகத்தை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று புலம்பும் படியான ஒரு சீரியல் ஓடுகிறது என்றால் அது பாரதி கண்ணம்மா சீசன் 2 தான். முக்கியமாக இந்த ஹீரோயின் எங்களுக்கு செட்டாகவில்லை என்று சொல்லக்கூடிய வினுஷா தேவி( கண்ணம்மா )இவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு 8000 ரூபாய் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த வாரம் முடியப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸில் மூத்த மருமகளாக இருக்கும் தனத்தின் சம்பளம் ஒரு நாளைக்கு 18,000 ரூபாய். மற்றும் அனைவரும் விரும்பி ரசித்து வரும் மீனாவின் கேரக்டருக்கு 12000 ரூபாய் மற்றும் முல்லை கேரக்டரில் நடிப்பவருக்கு 1000 ரூபாய் சம்பளம். அடுத்ததாக புத்தம் புது சீரியலாக வந்திருக்கும் சிறகடிக்கும் ஆசை என்ற நாடகத்தில் நடித்து வரும் மீனாவுக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 8000 ரூபாய் வழங்கப்படுகிறது. விஜய் டிவி அதிகமாக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூத்த மருமகள் தனம் மட்டும்.

Also read: இந்த வார டிஆர்பி-யில் ரணகளம் செய்த டாப் 10 சீரியல்கள்.. மோதிக் கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி

Trending News