வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

1000 எபிசோடை கடந்த விஜய் டிவி சீரியல்.. 4 வருடங்களாக டிஆர்பி-யில் கலக்கிய தொடர்!

சின்னத்திரை ரசிகர்களிடம் விஜய் டிவி சீரியல்கள் மற்றும் என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசு. அந்தவகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட அண்ணன்-தம்பி உறவுகளை மையப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இதில் மூர்த்தி-தனம், ஜீவா- மீனா, கதிர்-முல்லை கண்ணன்-ஐஸ்வர்யா என 4 அண்ணன் தம்பிகளும் அவர்களது மனைவியுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இந்த காலத்திலும் கூட்டுக்குடும்பம் சாத்தியம் என்று அதன் மகத்துவத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்

இந்த சீரியல் துவங்கப்பட்டு நான்கு வருடம் நிறைவடைந்ததோடு 1000 எபிசோடை கடந்திருக்கிறது. இதனால் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் தற்போது அதற்கான கொண்டாட்டத்தில் சோஷியல் மீடியாவில் அலப்பறை காட்டுகின்றனர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் விஜே சித்ரா மட்டும் இல்லையே என சிலர் வருத்தம் அடைந்துள்ளனர். சொல்லப்போனால் இந்த சீரியலின் முழு வெற்றிக்கும் காரணம் விஜே சித்ரா தான்.

Also Read: கதிரை கழட்டிவிடும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சினையை கிளப்பி விட்ட விஷப்பூச்சி

ஏனென்றால் அவர் முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததால் தான், இந்த சீரியல் மென்மேலும் பிரபலமானது. சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று தற்கொலை செய்துகொண்ட விஜே சித்ராவை இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

‘ஆண்டாண்டு காலம் அழுது ஆளும், மாண்டவர் வருவதில்லை’ என்பதால் சித்ராவின் பிரிவை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. அடித்து நொறுக்கும் சன் டிவி

டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல்களுக்கு பயங்கர டஃப் கொடுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 1000 எபிசோடை அசால்டாக கடந்திருப்பது விஜய் டிவிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Trending News