வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. ரொமான்ஸில் பின்னி பெடல் எடுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி

Vijay Tv Serial: குடும்பத்துடன் தினமும் பார்த்து வரும் ஒரே சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தான். இதுதான் நாடகத்தின் சிம்ம சொம்பனமாக ரசிகர்களின் மனதில் குடி புகுந்தது. அதனாலயே சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் பல மடங்கு அதிகரித்து முதலிடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாடகத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது விஜய் டிவியில் உள்ள நாடகம்.

அதாவது டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை பொதுவாக எல்லாரும் ரசித்துப் பார்ப்பார்கள். அதைத்தான் இந்த நாடகத்தில் ஆணிவேராக பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன் இவர்களுடைய காம்பினேஷனை ரசித்துப் பார்க்கும் அளவிற்கு மக்களை ஈர்த்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை விஜய் சேதுபதியாக பார்க்கும் சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்துவின் நடிப்புதான்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

இவருடைய நடிப்பை பார்த்து விட்டாலே அப்படியே விஜய் சேதுபதியின் நடிப்பை உறிச்சி வைத்திருக்கிறார் என்று சொல்வதற்கு ஏற்ப இருக்கும். இதனைத் தொடர்ந்து தற்போது முத்து மற்றும் மீனா ரோமியோ ஜூலியோ காதல் போல் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஒற்றுமையை பிரித்துப் பார்க்க வேண்டும் என்று முத்துவின் அம்மா சதி வேலையை செய்து விட்டார்.

அந்த வகையில் ஆடி மாதத்தை காரணம் காட்டி மீனாவை அவருடைய அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். போகும்போது முத்து மற்றும் மீனா கண்களாலே பேசிக்கொண்டு அவர்களுடைய அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். அடுத்ததாக முத்து வீட்டிற்கு வந்ததும் மீனாவின் ஞாபகம் இவரின் மனதிற்குள் தீயாய் பரவியது. அதனால் மீனாவிற்கு ஃபோன் பண்ணி நான் வீட்டுக்கு வருகிறேன் என்று தகவலை கொடுக்கிறார்.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

உடனே மீனா கணவர் வீட்டுக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தடபுடலான சமையலை செய்து கணவருக்கு பரிமாறுகிறார். பிறகு சாப்பாடு முடித்த கையோடு ரெஸ்ட் எடுப்பதற்காக முத்து அங்கேயே இருக்கிறார். இதை பார்த்ததும் மீனாவின் அம்மாவிற்கு அடி வயரை கலங்கிவிட்டது. எங்கே மாப்பிள்ளை இங்கே தூங்கி விடுவாரோ என்ற ஒரு பயம் வந்துவிட்டது.

ஏனென்றால் ஆடிமாசம் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக. ஆனால் இவர்கள் ஏற்கனவே தம்பதிகளாக இல்லற வாழ்க்கையில் இணைந்து விட்டார்கள். அடுத்ததாக முத்துவின் அண்ணியை மலைபோல் நம்பிக் கொண்டிருக்கும் மாமியாருக்கு கூடிய விரைவில் ரோகிணியின் சுயரூபம் தெரிய வரப்போகிறது. அப்போது முத்துவின் அம்மா
பத்ரகாளியாக மாறப்போகிறார். இதனை அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

Trending News