Vijay Tv Serial TRP Rating: திரும்புகிற இடமெல்லாம் கண்ணிவெடி தான் என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் டிவி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் முன்னாடி மாதிரி இல்லாமல் சற்று துவண்டு போய் வருகிறது. அதே மாதிரி டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி பக்கத்தில் நெருங்கி வந்த சில சீரியல்களும் பின்னடைவை சந்தித்தது.
அதையெல்லாம் சரி செய்யும் விதமாக இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் விட்ட இடத்தை சில சீரியல்கள் பிடித்திருக்கிறது. முக்கியமாக சிறகடிக்கும் ஆசை சீரியல் 8.05 புள்ளிகளை பெற்று சன்டிவி சீரியலுடன் மோதுவதற்கு தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்து இன்னும் ஒரு சில வாரங்களில் முதல் ஐந்து இடத்தை பிடித்து விடும்.
அதற்கு காரணம் ரோகிணி பற்றிய விஷயங்கள் எதுவும் வெளியே வராமல் இருந்ததால் தான். ஆனால் இப்பொழுது ரோகிணி எல்லா பக்கமும் மாட்டப் போகிறார் என்பதற்கு ஏற்ற மாதிரி ஜீவா கனடாவில் இருந்து வருகிறார். முத்து தான் இவரை பிக்கப் பண்ணப் போகிறார். அப்படி இவர்கள் சந்திக்கும் பொழுது 30 லட்ச ரூபாய் பணத்தை மனோஜிடம் கொடுத்த விஷயமும் அதை வைத்து தான் ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூம் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையும் தெரிய வரப்போகிறது.
அத்துடன் பார்வதி வீட்டில் 2 லட்சம் பணத்தை திருடியதும் ரோகிணி தான் என்பதை முத்து கண்டுபிடிக்க போகிறார். போன் காணாமல் போனதற்கு ரோகிணி தான் காரணம் என்று செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி மூலம் தெரிய வரப்போகிறது. கிரிஷ் அண்ணாமலை வேலை பார்க்கும் ஸ்கூலில் படிக்கிறார் என்ற விஷயமும் முத்து காதுக்கு தெரியவரும்.
சத்யாவின் வீடியோவை சிட்டி இடம் கொடுத்து சோசியல் மீடியாவில் அனுப்ப சொன்னதும் ரோகிணி தான் என்ற எல்லா உண்மைகளும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரப்போகிறது. அந்த வகையில் ரோகினிக்கு சிறகடிக்கும் சீரியல் டீம் மொத்தமாக ஆப்பு வைத்து விட்டது. இந்த விஷயம் மக்களிடம் மிகப் பரபரப்பாக போகும் பட்சத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3 இடத்திற்கு வந்துவிடும்.
இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7.09 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் 6.68 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும், ஆகா கல்யாணம் சீரியல் 6.67 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும் சின்ன மருமகள் சீரியல் 6.15 புள்ளிகளை பற்றி 5 வது இடத்திலும் இருக்கிறது. அத்துடன் மகாநதி சீரியல் 4.90 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.