Serial Trp List: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பத்து சீரியல்கள் மட்டுமே மக்களிடத்தில் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அதிகப்படியாக மக்களின் பேவரைட் சீரியல்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சில சீரியல்கள் மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் எப்போதுமே விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்றிருப்பது சிறகடிக்கும் ஆசை சீரியல் தான்.
ஆனால் அதில் ரோகினி பற்றிய ரகசியங்கள் தெரியாமல் தொடர்ந்து முத்து மற்றும் மீனா அவமானப்பட்டு வந்து கொண்டிருப்பதால் கோபமடைந்த மக்கள் அந்த சீரியலை பார்ப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் அடி வாங்கியது.
இதையெல்லாம் சரி செய்யும் விதமாக இந்த மாதம் துவக்கத்திலேயே பல நாள் திருடன் ஒரு நாள் ஆகப்படுவான் என்பதற்கு ஏற்ப ரோகிணியின் தில்லாலங்கடி வேலை வெளிவர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் ஜீவாவிடம் இருந்து வாங்கிய 27 லட்சம் பணத்தை வைத்து தான் மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ற விஷயம் முத்துவுக்கு தெரிவந்தது.
முத்துவும் ஜீவாவை கூட்டிட்டு வந்து கையும் களவுமாக சிக்க வைத்து விட்டார். இதனால் ரோகிணி சிக்கியதால் மக்கள் ரொம்பவே குஷி ஆகிவிட்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் பழைய மாதிரி 8.87 புள்ளிகளை வாங்கி விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை சீரியல் முதலிடத்தில் ஒய்யாரமாக ஜொலித்து வருகிறது.
இதனை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப கதையாகவும் அதில் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட்களின் நடிப்பும் மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியல்தான் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டியனையே ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் 6.70 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.44 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக ஆகா கல்யாணம் 5.33 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், சின்ன மருமகள் சீரியல் 5.15 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விட மக்கள் ஆவலாக எதிர்பார்த்து அதிகப்படியான வரவேற்பை கொடுத்து வருவது மகாநதி சீரியலுக்கு மட்டுமே. ஆனால் அந்த சீரியலின் டைமிங் கொஞ்சம் சரியில்லாததால் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து ஆறாவது இடத்தை பெற்று வருகிறது. இந்த வாரம் மகாநதி சீரியல் 4.23 புள்ளிகளை பெற்றிருக்கிறது.