வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8

Biggboss 8: விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தது.

அதேசமயம் விஜய் சேதுபதி வந்தபோது அனைவரும் வரவேற்பு கொடுத்தார்கள். இப்போது பார்த்தால் உலகநாயகனே இருந்திருக்கலாம் என இரு மாறுபட்ட மனநிலையில் இணையாவாசிகள் இருக்கின்றனர்.

அதற்கேற்றார் போல் இந்த எட்டாவது சீசனில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த சுவாரஸ்யமான சம்பவங்களும் இல்லை முழுக்க முழுக்க போட்டியாளர்கள் வன்மத்தை மட்டும் தான் காட்டுகின்றனர் ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிக்கும் வகையில் இருந்த நிகழ்ச்சி இப்போது சூர மொக்கையாக உள்ளது.

அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கூல் டாஸ்க் இன்னும் மோசம். மூன்றாவது சீசனில் சாண்டி, கவின் இருந்தபோது எவ்வளவு ஜாலியாக இருந்தது. ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் ஒருவர் கூட சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ்

அதேபோல் வார இறுதி நாட்களில் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யமும் இல்லை. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதையே சிலர் தவிர்த்து விட்டனர். ஏனென்றால் முந்தைய சீசனில் அவ்வப்போது குறும்படம் போட்டு சுவாரசியத்தை அதிகப்படுத்துவார்கள்.

ஆனால் இந்த சீசனில் அது மிஸ்ஸிங். ஒரு நாலு குறும்படம் போட்டு காட்டி இருந்தா கூட நிகழ்ச்சி விறுவிறுப்பா மாறி இருக்கும். ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல் விஜய் சேதுபதியே அனைத்தையும் சொல்லிவிடுகிறார்.

அதேபோல் ஆண் பெண் என இரு அணிகளாக வீடு பிரிந்து இருக்கிறது. இதுவும் சுவாரஸ்ய குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இருதரப்பும் போட்டி போட்டுக் கொண்டு வன்மத்தை கக்குகின்றனர்.

அதில் ஆண்கள் அணி பெண்களை எப்போதும் டாமினேட் செய்வதில் தான் குறியாக இருக்கிறது. இப்படியாக செல்லும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் கடினமான மற்றும் சுவாரஸ்யமான டாஸ்க் கொடுத்தால் தலை தப்பும்.

Trending News