புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டிஆர்பியில் அதிரடி காட்டும் விஜய் டிவி.. எதிர்நீச்சலால் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி

Serial Trp Rate: வெள்ளித்திரையில் என்னதான் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் குடும்பத்துடன் தினமும் பார்த்து ரசிப்பது சீரியல் மட்டும் தான். அந்த வகையில் பல சேனல்கள் போட்டி போட்டு நாடகத்தை வெளியிட்டு வருகிறார்கள். அதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி மட்டும் எப்பொழுதுமே முதல் மற்றும் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும். அந்த வகையில் ரசிகர்கள் எந்த சீரியல்களை விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகும். அதை தற்போது பார்க்கலாம்.

அதில் 10-வது இடத்தில் புதிதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்கத் தூண்டும் படி வந்துள்ள ஆஹா கல்யாணம். இதில் இவர்கள் ஆரம்பத்தில் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டாலும் இவர்களுடைய ரொமான்ஸ் பார்க்கும் பொழுது நன்றாக இருக்கிறது. அடுத்ததாக 9-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாசத்தை வைத்து அவர்களுடைய குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக வந்து கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல்.

Also read: தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல.. சாகப் போற நேரத்துல வளைகாப்பு கேக்குதா!

அடுத்ததாக 8-வது இடத்தில் கல்யாணத்தை பொம்மை கல்யாணம் போல் மாற்றி மாற்றி வைத்து விளையாடும் ஈரமான ரோஜாவே சீரியலும், 7-வது இடத்தில் சுந்தரி எப்பொழுது கலெக்டர் ஆவார் என்று பொறுமை இழந்து காத்துக் கொண்டிருக்கும் நாடகமும், 6-வது இடத்தில் கயல் சீரியலும் இருக்கிறது. இந்த இரண்டு நாடகமும் எப்பொழுதும் டாப் 5 இடத்திற்குள் தான் இருந்தது. ஆனால் தற்போது பின்னடைந்து விட்டது.

அடுத்ததாக முதல் ஐந்து இடத்தை பிடித்த நாடகங்களை பற்றி பார்க்கலாம். 5-வது இடத்தை பிடித்திருப்பது, ரக்குடு பாயாக இருந்த விக்ரம் வாழ்க்கையில் இனியா நுழைந்த பிறகு சாக்லேட் பாயாக மாறின இனியா சீரியல் தான். அடுத்து 4-வது இடத்தில் விஜய் டிவியில் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த சிறகடிக்கும் ஆசை சீரியலில் தற்போது இவர்களுக்குள் ரொமான்ஸ் மலர்ந்ததால் முன்னுக்கு வந்துவிட்டது.

Also read: அப்பா கோபியை மிஞ்சும் அளவிற்கு போன மகன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி

இதனை அடுத்து 3-வது இடத்தைப் பிடித்து இருப்பது அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து, அவர்களுக்கு திருமணம் ஆன பிறகு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக குடும்பங்கள் கொண்டாடி வரும் நாடகமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அடுத்ததாக 2-வது இடத்தில் சமீப காலமாக சன் டிவியின் டிஆர்பி ரேட்டின் மன்னன் என்று சொல்லும் அளவிற்கு இருந்த எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு போய்விட்டது. முதல் இடத்தில் கொஞ்ச நாளாகவே பின்னுக்கு போய்க்கொண்டு இருந்த பாக்கியலட்சுமி தொடர் கோபியின் நடிப்பு மற்றும் பாக்கியாவின் துணிச்சலான பேச்சு இது அனைத்திற்கும் கிடைத்த பரிசாக முதல் இடத்தை பிடித்து விட்டது.

Also read: கொடூர கல் நெஞ்சக்காரனாக தங்கையை கதறவிட்ட குணசேகரன்.. தாறுமாறாக கிழித்த ஜான்சிராணி

Trending News