வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

போட்டிப் போட்டு சாட்டிலைட் உரிமையை தட்டிப் பறித்த விஜய் டிவி.. IMDB ரேட்டிங் பார்த்து எகிறிய செம்பி பட மார்க்கெட்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான செம்பி படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. மலைவாழ் கிராம பெண்ணாக படம் முழுவதும் வலம் வரும் கோவை சரளா, பல தைரியமான காட்சிகளில் நடித்துள்ளார். காமெடியாக நடித்து வந்த கோவை சரளாவை பார்த்த நாம், இப்படத்தில் அவர் தேம்பி தேம்பி அழுவும் காட்சிகள் பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

காட்டையும் , மலையையும் நம்பி வாழ்ந்து வரும் வீரத்தாய் பாட்டியாக வலம் வரும் கோவை சரளா தனது பேத்திக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார். மேலும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்து, பேருந்தில் பயணிக்கும் இருவருக்கும், இடையிடையே ஏற்படும் பிரச்சனைகள் ,அந்த பேருந்தில் உள்ளோர்களின் உதவி என இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகரும் வகையில் பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.

Also Read: காமெடி நடிகை என்ற பிம்பத்தை உடைத்த கோவை சரளா.. செம்பி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

மேலும் நடிகர் அஸ்வின், தம்பி ராமையா ,இப்படத்தில் செம்பியாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் நிலா உள்ளிட்டோர் நடிப்பில் அசத்தியுள்ளனர். செம்பி படத்தை பார்த்து கமல்ஹாசன் மேடையிலேயே புகழ்ந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி இப்படம் வெளியானது. இப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.

இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் 2.5 கோடி வரை வசூலை அள்ளியுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சியும், ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ 5 தளமும் வாங்கியிருந்தது. ஆனால் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிபெற்றதையடுத்து பிரபல தனியார் தொலைக்காட்சி போட்டிப் போட்டு இப்படத்தை வாங்கியுள்ளது.

Also Read: செம்பி முன் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய ராங்கி, டிரைவர் ஜமுனா.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

ஏற்கனவே இயக்குனர் பிரபு சாலமனின் படங்களான கயல், கும்கி ,மைனா உள்ளிட்ட படங்களின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கி ஒளிபரப்பிய நிலையில், செம்பு படத்தையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் ஓடிடியில் வரும் பிப்ரவரி மாதம் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வாங்கியுள்ளது.

கிட்டத்தட்ட ஆறிலிருந்து 8 கோடிகள் வரை அள்ளிக்கொடுத்து விஜய் டிவி இப்படத்தை வாங்கியுள்ளது. பிரபு சாலமனின் மற்ற படங்களை விட செம்பி படத்திற்கு தான் இவ்வளவு கோடிகள் செலவு செய்து விஜய் டிவி வாங்கியுள்ளதாம். மேலும் விஜய் டிவியின் கூட்டணி ஓடிடி நிறுவனமான, டிஸ்னீ பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஜீ 5 நிறுனத்திடம் இருந்து பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

Trending News