வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமல் இல்லாத பிக்பாஸ் 8 எப்படி இருக்கும்.? மீண்டும் வரும் சீனியர்ஸ், விஜய் டிவியின் புது டெக்னிக்

Biggboss 8: சமீப காலமாக சோசியல் மீடியாவை ஜெயம் ரவியின் விவாகரத்து மணிமேகலையின் சுயமரியாதை ஆகியவை தான் ஆக்கிரமித்து இருந்தது. அதை ஓரம் கட்டும் வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க தயாராகிவிட்டது பிக்பாஸ் 8.

ஏழு வருடங்களாக கமல் தாங்கி பிடித்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது விஜய் சேதுபதியின் கைக்கு வந்துள்ளது. இதுவே ஒரு புது உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது.

இந்த முறை ஏதாவது புதுசா செய்தால் மட்டும்தான் டிஆர்பியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதை நன்றாக தெரிந்து கொண்ட விஜய் டிவி தற்போது புது டெக்னிக் மூலம் ரசிகர்களை கவர முடிவு செய்து இருக்கிறது.

சீனியர்கள் கலக்கும் விவாத மேடை

அதன்படி இத்தனை சீசன்களாக நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சீனியர் போட்டியாளர்களை ஒரு விவாத மேடைக்கு அழைத்துள்ளது விஜய் டிவி. இவர்கள் ஒரு பக்கமும் பிக்பாஸை உன்னிப்பாக கவனித்து வரும் ரசிகர்கள் ஒரு பக்கமும் என இந்த விவாதம் நடைபெற உள்ளது.

இதில் ரசிகர்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் சீனியர் போட்டியாளர்கள் பதில் சொல்ல இருக்கின்றனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத், தாமரைச்செல்வி, சுரேஷ் சக்கரவர்த்தி என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த வார இறுதியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதன் மூலம் பரப்பரப்பை ஏற்படுத்தி வரும் ஆறாம் தேதி தொடங்க இருக்கும் நிகழ்ச்சிக்கான ப்ரமோஷனையும் விஜய் டிவி கையில் எடுத்துள்ளது.

தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சில எதிர்பாராத பிரபலங்களும் உள்ளே வர இருக்கின்றனர். அதிலும் மணிமேகலை விவகாரத்தால் விஜய் டிவியின் இமேஜ் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதை போக்கும் விதமாக ஒரு போட்டியாளர் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டவர் இல்லாத பிக்பாஸ் 8 எப்படி இருக்கும்.?

Trending News