வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்.. விஜய் டிவி செய்த தரமான முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் கூட தவறாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்து விடுவாராம். அவ்வாறு மிகப்பெரிய பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவராக உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, குரேஷி, மணிமேகலை, அதிர்ச்சி அருண், பரத், சுனிதா மற்றும் பலர் பங்குபெற்றனர். மேலும் புகழ் வெள்ளித்திரைக்கு சென்றதால் சில எபிசோடுகள் மட்டுமே பங்கு பெற்றார்.

கடந்த 2 சீசன்களை விட இந்த சீசன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மேலும் வெள்ளித்திரை சார்ந்த பல பிரபலங்கள் தங்களது படத்தின் பிரமோஷனுக்காக இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தனர். கடைசியாக பார்த்திபன் இரவின் நிழல் படத்தின் புரமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில் வருகின்ற வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. இதில் ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் பைனல் லிஸ்ட்களாக தெரிவாகியுள்ளனர். யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 3 வெற்றியாளராக ஸ்ருதிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். மேலும் ஸ்ருதிகா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ருதிகா இருக்கும் இடத்தை எப்போதுமே பாசிட்டிவாக வைத்துக் கொள்ளக் கூடியவர். தற்போது இவர் தான் டைட்டில் வின்னர் என்பதை அறிந்த ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவி சரியான வெற்றியாளரை தேர்ந்தெடுத்து உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

Trending News