
Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் எல்லாமே மக்களை கவர்ந்து வருகிறது. ஆனாலும் எதிர்பார்த்தபடி டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெறாமல் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னரே ஹாட்ஸ்டாரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
அதனால் பல குடும்பங்களில் ஹாட்ஸ்டார் மூலம் காலையிலேயே எல்லா சீரியல்களை பார்த்து விடுகிறார்கள். இதனால் டிவியில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கம்மியாகி விடுகிறது. இந்த ஒரு காரணத்திற்காக தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் கம்மியான ஓட்டுகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் 15 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதில் 8 சீரியல்கள் தான் சொல்லும் படியான ரேட்டிங்கை பெற்று இருக்கிறது.
மற்ற சீர்களை எல்லாம் டல் அடிக்கிறது, அதிலும் கடைசி இடத்தில் இருக்கும் சீரியல் பனிவிழும் மலர்வனம். இந்த சீரியல் ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. காரணம் டிஆர்பி ரேட்டிங்கில் அடிமட்டத்தில் இருப்பதால் முடிப்பதற்கு தயாராகிவிட்டது. ஆனால் மற்ற சீரியல்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இந்த சீரியல்களின் கதைகளும் ஆர்டிஸ்ட்களின் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தான் இருக்கிறது.
அந்த வகையில் பிரேம் டைமில் ஒளிபரப்பாகி வந்திருந்தால் நிச்சயம் டிஆர்பி ரேட்டிங் இல் வெற்றி கிடைத்திருக்கும். தற்போது மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பு செய்வதால் இந்த நாடகம் பலருக்கும் தெரியாமலேயே போய்விடுகிறது. இதில் இரண்டு கதாநாயகன் கதாநாயகிகள் இருந்தாலும் பிரயோஜனம் இல்ல என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் போய் முடிகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 1.93 புள்ளிகளை தான் பெற்று இருக்கிறது.