டி.ஆர்.பி-யில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி.. ஆனாலும் சன் டிவி இந்த ஒரு விஷயத்தில் சாமர்த்தியம்.!

தமிழில் தொலைக்காட்சிகளில் பல்வேறு முதன்மையான சேனல்கள் உள்ளது எனினும் எல்லாம் கலந்த கலவையாக இருப்பது சில சேனல்கள் மட்டுமே. அநத வகையில் சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் டிவி, ஜி தமிழ் என எளிதாக வரிசைபடுத்தலாம்.

குறிப்பிட்ட இந்த சேனல்கள் தான் சீரியல் செய்திகள் திரைப்படம் ரியாலிட்டி ஷோ என எல்லாவற்றையும் கலந்து மக்களுக்கு காட்சியிட்டு வருகின்றன மற்றவை எல்லாம் தனிப்பட்டு தனித்தனி விருப்பங்களுக்காக காட்சிப்படுத்தும் காமெடிக்கு தனி நியூஸ்-க்கு தனி பாடல்களுக்கு தனி திரைப்படங்களுக்கு தனி என அவற்றின் செயர்பாடுகள் எல்லாம் கலந்த சேனல்களுக்கு நிகராக இருப்பதில்லை.

இந்த வகையில் சீரியல்களில் மக்களை கவர்ந்து இழுக்கும் சேனல்கள் என்றால் அது விஜய் டிவியும் சன் டிவியும் தான். நீண்ட காலம் வரை சீரியலின் ராணியாக இருந்து வந்த சன் டிவி விஜய் டிவியின் சீரியல்களுக்கு பின் சில மாற்றங்களை கண்டுள்ளது. போட்டியாளர் இருந்த இன்னும் சுவாரஸ்யம் அதிகரிக்க தானே செய்யும் அதே போல் பல்வேறு சுவாரஸ்யங்கள் மிக்க சீரியல்களை களம் காணவிட்டது சன் டிவி.

venba-bharathikannamma-1

விஜய் டிவியும் அதற்கு நிகராக டஃப் காம்படிசன் கொடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாக உள்ளது. டி.ஆர்.பி என்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது தனை அனைத்து சேனல்களும் மிக கவனமாக பார்க்கும் அதன் அடிப்படையில் தான் அந்த ப்ரோகிராம்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்படும்.

கடந்த வாரத்திய ரிப்போர்ட் படி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் சன் டிவியின் ரோஜா இருக்கிறது. என்னதான் முதலிடத்தை பிடிக்க தவறினாலும் டாப் டென்னில் அதிகமாய் இடம் பெற்றிருப்பது சன் டிவி தான் சன் டிவியின் 6 சீரியல்கள் உள்ள அதே பட்டியலில் விஜய் டிவியின் நான்கு சீரியல்களே இடம் பெற்றுள்ளன.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா,பாண்டியன் ஸ்டோர்ஸ்,பாக்யலட்சுமி,ராஜா ராணி முறையே ஒன்று மூன்று ஐந்து மற்றும் எட்டாம் இடங்களை பெறுகின்றன பட்டியலில் அதிக இடங்களை பிடிக்கும் சன் டிவியின் ரோஜா,கண்ணான கண்ணே,வானத்தைப்போல,பூவே உனக்காக,சுந்தரி முறையே இரண்டு,நான்கு,ஆறு,ஏழு,ஒன்பது,பத்தாம் இடங்களை தங்கள் வசமாக்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -