கடந்த வருடம் போல் இந்த வருடம் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் அடுத்த டார்கெட் பிக் பாஸ் தான்.
போன வருடமே குறித்த தேதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த முடியாமல் பயங்கர சிக்கல்களை மேற்கொண்டு, மேலும் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடைசி சமயத்தில் விலக, எப்படியாவது நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் என கிடைத்த பிரபலங்களை எல்லாம் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை சொதப்பி விட்டனர்.
ஆனால் இந்த முறை அப்படி இருக்காதாம். வெகுவிரைவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குவதற்கான வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் விஜய் டிவிக்கு ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் வந்துள்ளது.
ஏற்கனவே கொரானா மூன்றாம் அலை வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதால் அதற்கு முன்னரே பிக் பாஸ் 5 நிகழ்ச்சி படப்பிடிப்புகளை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது விஜய் டிவி.
இந்த சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது தெரிந்த விஷயம் தான். இதற்கான அட்வான்ஸ் தொகையை ஏற்கனவே கமல் வாங்கி செலவு செய்து விட்டதாக அவரது கட்சி நிர்வாகி ஓபனாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் எப்போதுமே நடத்தப்படும் பிக்பாஸ் அரங்கில் சமீபத்தில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தபோது விதியை மீறி செயல்பட்டதாக சீல் வைத்து விட்டனர்.
தற்போது அந்த சிக்கல் ஒரு பக்கம், கமலின் புதிய படப்பிடிப்புகள் ஒருபக்கம் என எந்த முடிவும் செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறதாம் விஜய் டிவி. ஆனால் இதுகுறித்து கமல் கவலைப்படாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளை கவனித்து வருகிறார் என வருத்தப்படுகிறார்களாம். இதனால் எப்போது பிக்பாஸ் தொடங்கினாலும் நீங்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என கமலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாம் விஜய் டிவி.
