வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பண்றது பிராடு வேலை இதுல இளையராஜா மியூசிக் வேற.. வைதேகி உங்க அட்டகாசம் தாங்கல

விஜய் டிவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட புத்தம்புது சீரியல் ‘வைதேகி காத்திருந்தாள்’. இந்த சீரியலில் கதாநாயகியாக சரண்யாவும், கதாநாயகனாக பிரஜந்த் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகி வைதேகி சிறுவயதில் காணாமல் போய் தற்போது சொந்த வீட்டின் சொத்துக்களை அபகரிக்கும் கூட்டத்திற்கு சப்போட்டாக நடிக்க வந்துள்ளார்.

வைதேகி காத்திருந்தாள் சீரியலின் கதாநாயகன் வைதேகிக்கு சொந்த அத்தை பையன். இன்னிலையில் கதாநாயகன் பார்வையில் வைதேகி, தேவதைபோல் தெரிகிறார். அத்துடன் வைதேகி க்கும் அவ்வப்போது சிறு வயதில் நினைவு வந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்றில் சுதாநாயகி வைதேகி, கடைக்காரருக்கு தெரியாமலே ஹேண்ட் பேக்கில் இருக்கும் விலையை மாற்றி அமைத்து, கடைக்காரரை நாசூக்காக ஏமாற்றுகிறார்.

அப்போது வைதேகி காசை கொஞ்சம் அதிகமாக கொடுத்த கடைக்காரரிடம் நல்லவர் போல் அந்தப் பணத்தை திரும்பி கொடுத்ததும். தூரத்திலிருந்து இதைப் பார்க்கும் கதாநாயகனாக வைதேகி சிறந்த குணம் உடைய பெண்ணாகவே தென்படுகிறார்.

அதன் பிறகு இளையராஜா இசையுடன் பின்னணியில் வைதேகியை மறைந்து மறைந்து கதாநாயகன் பார்ப்பது சீரியலில் விறுவிறுப்பை கூட்டுகிறது. இதன்பிறகு வைதேகி எப்படி கதாநாயகன் வீட்டின் உறுப்பினராக மாறப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் வைதேகி காத்திருந்தாள் ப்ரோமோவை வைத்து சமூகவலைதளங்களில் சின்னத்திரை ரசிகர்கள் இஷ்டத்திற்கு கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News