சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அண்ணன் தம்பிக்குள் சண்டையை மூட்டி விட்ட பல்லவி.. சூழ்ச்சியால் அவமானப்பட்ட கண்ணன்

Veetuku Veedu Vaasapadi: விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் பல்லவியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டு குடும்பத்தை பழிவாங்க வந்த இவர் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறார்.

அதில் பலியாடாக சிக்கி இருக்கும் கண்ணன் தற்போது குடும்பத்தினர் முன் அவமானப்பட்டு நிற்கிறார். இன்றைய எபிசோடில் அர்ஜுன் கண்ணனிடம் ஆபீஸ் விவகாரத்தை பற்றி பேசுகிறார். அதில் விலையுள்ள பொருட்களை கம்மியான விலைக்கு விற்றது பற்றி கேள்வி கேட்கிறார்.

இது எதுவும் தெரியாத கண்ணன் அண்ணனிடம் இல்லை என்று சொல்கிறார். ஆனால் அவர் போட்ட கையெழுத்து ஆதாரமாக வந்து நிற்கிறது. அந்த சமயத்தில் அவருடைய அப்பா வந்து விஷயத்தை கேள்விப்பட்டு கண்ணனை அடி வெளுத்து வாங்குகிறார்.

அர்ஜுனிடம் மாட்டிய கண்ணன்

இதை எதிர்பார்த்த பல்லவி உடனே நல்ல பெண்ணாக புருஷனுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் ரணகளமாக இருக்கிறது. ஏற்கனவே வீட்டில் சாருவின் விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் அப்பாவியான கண்ணன் வேறு பல்லவியின் சூழ்ச்சியில் சிக்கிவிட்டார். அப்பாவிடம் அடிவாங்கி அவமானப்படும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

ஆனால் பல்லவி அதற்கு முன்பே ஏதாவது பிளான் போட்டு இருக்கும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி விடுவார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை பிரிக்க அவர் நடத்தும் நாடகத்தை மூத்த மருமகள் எப்படி சாமர்த்தியமாக தடுக்க போகிறார் என்பதுதான் கதையின் மிகப்பெரிய ட்விஸ்ட்.

பல்லவியின் சூழ்ச்சியில் சிக்கிய கண்ணன்

Trending News