புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பார்வதியை மட்டம் தட்டிய தாய் கிழவி, நோஸ்கட் கொடுத்த அர்ஜுன்.. பிரியாவை வெறுப்பேத்தியே பல்லவி

Veetuku Veedu Vaasapadi: விஜய் டிவி வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் பிரியாவுக்கு கல்யாணம் ஏற்பாடு அவசரமாக நடந்து வருகிறது. இதில் மாப்பிள்ளை நல்ல பிள்ளையாக வரதட்சணை வேண்டாம் என்று சொன்னது அடுத்த ட்விஸ்ட் ஆக இருக்கிறது.

இன்றைய எபிசோடில் பல்லவியின் கணக்குப்படி அனைத்தும் நடக்கும் நிலையில் விஸ்வநாதன் தன் குடும்பத்தினரிடம் இது குறித்து பேசுகிறார். மாப்பிள்ளை அனைவருக்கும் பிடித்ததால் கல்யாண ஏற்பாடு செய்யலாம் என ஒரு மனதாக பேசுகின்றனர்.

ஆனால் அர்ஜுன் எதற்கும் யோசித்து செய்யலாம் என்று சொல்ல பார்வதியும் அதையே தான் கூறுகிறார். உடனே தாய் கிழவி பார்வதியை வழக்கம் போல மட்டம் தட்டி பேசுகிறார். இதனால் கடுப்பான அர்ஜுன் மனைவிக்கு சப்போர்ட் செய்து தாய்க்கிழவிக்கு நோஸ்கட் கொடுக்கிறார்.

பார்வதியை மட்டம் தட்டும் பாட்டி

இதனால் பிரியா தான் எங்கே கல்யாணம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அஜயை எப்படியாவது ஓரம் கட்டிவிட்டு தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என மாமனார் சதி திட்டம் போடுகிறார்.

மேலும் கல்யாண பேச்சால் நொந்து போயிருக்கும் பிரியாவை வேண்டும் என்று வெறுப்பேற்றுகிறார் பல்லவி. இப்படியாக இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் அர்ஜுன் பார்வதி மட்டுமே பிரியாவுக்கு சப்போர்ட்டாக இருக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த வார ப்ரோமோவில் பிரியாவின் காதலுக்கு அர்ஜுன் பச்சைக்கொடி காட்டுவதும் விஸ்வநாதன் கல்யாண ஏற்பாடு செய்வதும் காட்டப்பட்டது. அந்த வகையில் அப்பா மகன் எதிர் எதிராக மாறப் போகிறார்களா? பல்லவியின் திட்டம் என்ன? என்பது சுவாரஸ்யமான எபிசோடுகளாக ஒளிபரப்பாக உள்ளது.

பிரியா கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா அர்ஜுன்.?

Trending News