வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் டிவியில் வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த பிக்பாஸ் அர்ச்சனா.. குவியும் வாழ்த்துக்கள்

சன் டிவியின் மூலம் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அர்ச்சனா. கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார் அர்ச்சனா.

விஜய் டிவியில் வாய்ப்பு குறைந்ததால் கலைஞர் டிவி, புதுயுகம் டிவி,  Zee தமிழ் என்று மாறி மாறி வேலை பார்த்து வந்த அர்ச்சனாவிற்கு, விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.

அதற்குப் பின்னர் விஜய் டிவி அர்ச்சனாவை குத்தகை எடுத்து விட்டது சில மாதங்களாக காதலே காதலே, ஓல்ட் இஸ் கோல்ட், மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

விஜே-வாக அர்ச்சனாவிற்கு போரடித்து விட்டதோ என்னவோ தெரியவில்லை, தற்போது ரேடியோ ஜாக்கியாக மிர்ச்சி எப் எம் சேனலில் ரேடியோவில் ஜாக்கியாக களமிறங்கியுள்ளார்.

“Hi Chennai with Achuma – Attakaasam Unlimited” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். காலை 7:00 மணி முதல் 12 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு அர்ச்சனா நேற்று முதல் பணியை தொடங்கி விட்டாராம்.

இந்த செய்தியை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஸ்வினி அர்ச்சனாவை வரவேற்று பதிவிட்டு உள்ளது இன்னும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

rj-archana
rj-archana

இந்த ரேடியோ ஜாக்கியாக மாறி உள்ள அர்ச்சனாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு பாத்ரூம் டூர் வீடியோ போட்டு நெட்டிசன்கள் இடம் செமத்தியாக வாங்கிக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News