செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ஏமாந்துபோன விஜய் டிவி தொகுப்பாளினி.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோகம்

ஒரு காலத்தில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர்தான் அந்த நாயகி. தற்போது இருக்கும் நம்பர் ஒன் தொகுப்பாளினிகள் பிறகு அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருந்தவராகவும் இவரை சொல்லலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவரது சினிமா கேரியர் எக்குதப்பாக அடி வாங்கியுள்ளது.

ஒருவேளை கல்யாணம் செய்துகொண்டவருடனேயே வாழ்ந்திருந்தால் அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் அப்படியே இருந்துருக்குமோ என்னமோ. ஆனால் திருமணமான பத்தே நாளில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு பொறந்த வீட்டுக்கு பொட்டியை கட்டிவிட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கிறேன் என சில தேவையில்லாத கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

எல்லாம் இன்னொரு தொகுப்பாளினி கொடுத்த ஐடியாவாக தான் இருக்கும். அவரும் இப்படித்தான் திருமணமாகி விவாகரத்து வாங்கிக் கொண்டு தற்போது சிங்கிள் தான் கெத்து என சீன் போட்டு வருகிறார். ஆனால் அவருக்கு மார்க்கெட் இன்னும் குறைந்தபாடில்லை. இப்போது விஜய் டிவிக்கு சென்றாலும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுப்பார்கள்.

ஆனால் இந்த நடிகையின் நிலைமையோ பரிதாபம். நமக்கு கொஞ்சம் சின்ன வயசுதானே, ஹீரோயினாக ட்ரை பண்ணலாம் என அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியுள்ளது. மேற்கொண்டு இளம் நடிகர்களுக்கு சோப்பு போட ஆரம்பித்து விட்டாராம்.

ஆனால் யாருமே கண்டு கொள்வதாக தெரியவில்லை. முன்னர் நன்றாக கொழுக் மொழுக் என இருந்த அந்த நடிகை லாக்டோன் நாட்களில் உடல் எடையை குறைத்து சோற்றுக்கே வழியில்லாத போல் பாவமாக தெரிகிறார். போதாக்குறைக்கு தன்னை விட வயது அதிகமான நடிகருக்கு ஜோடியாக சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

ஆக மொத்தத்தில் சினிமா வாழ்க்கை செட் ஆகவில்லை என மீண்டும் டிவிக்கே சென்றுவிடலாம் என யோசித்து தூது விட்டுள்ளார். ஆனால் விஜய் டிவியோ போனது போனதாகவே இருக்கட்டும் என கைகழுவி விட்டார்களாம். மிகப் பெரிய நடிகையாகிவிடலாம் என்ற கனவில் இருந்த வேலையையும் விட்டுட்டு தற்போது பட வாய்ப்பும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினயை பார்த்து கோலிவுட் வட்டாரமே பரிதாபப் படுகிறதாம்.

Trending News