செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

ஜிபி முத்துவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி.. வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது சீசன் 4

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவருக்கு மாஸ் ஆடியன்ஸ் இருந்தனர். ஆனால் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாமல் தவித்து வந்த ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து இருந்தவரை டிஆர்பி எகிறியது. ஆகையால் திரும்பவும் ஜிபி முத்துவை மொத்தமாக விஜய் டிவி குத்தகை எடுத்துள்ளது. இப்போது வேறு ஒரு நிகழ்ச்சியில் ஜிபி முத்து களம் இறங்கி உள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர்.. திட்டம் போட்டு காயை நகர்த்திய விஜய் டிவி

அதாவது விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, பாலா ஆகியோருக்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார்கள். இப்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.

இதில் ஜிபி முத்துவும் பங்கு பெறுகிறார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து போட்டியாளராக கலந்து கொள்வதை காட்டிலும் கோமாளியாக கலந்து கொள்ள தான் அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மற்ற சீசன்களை காட்டிலும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : டிரெய்லரை வைத்து வசூலில் ஆட்டிப்படைக்க போகும் துணிவு.. அஜித்துக்கு முழு டான்ஸரான பிக் பாஸ் பிரபலம்

அதுவும் புகழுடன், ஜிபி முத்து காம்போவை யோசிக்கக்கூட முடியவில்லை. கண்டிப்பாக இந்த சீசன் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைய உள்ளது. மேலும் எப்போது சீசன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சீசனையும் ரக்சன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சென்ராயன், சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ விரைவில் வெளியாகும்.

Also Read : சன்னி லியோன், ஜிபி முத்துவை வைத்து காசு சம்பாதிக்க போட்ட திட்டம்.. இதுக்கு பிட்டு படமே நடிச்சுருக்கலாம்

Trending News