வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதியை வைத்து சன் டிவியின் கண்ணை குத்திய விஜய் டிவி.. மீண்டும் டிவி பக்கம் வரும் மக்கள் செல்வன்

Vijay Sethupathi: தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடி வந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக எத்தனையோ பேரை சொல்லலாம். அதில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் கிடைக்கும் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஒரு சில படங்களில் முகத்தை காட்டி வந்த இவர் நடிப்பால் முன்னுக்கு வந்து தற்போது பான் இந்தியா நாயகன் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் செல்வன் என்று பட்டத்தை வென்றிருக்கிறார்.

அப்படிப்பட்டவர் சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 50 ஆவது படத்தை தொட்டிருக்கிறார் என்பது பாராட்டக்கூடிய விஷயம். அத்துடன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி தன்னை வருத்திக்கொண்டு நடிக்கக்கூடிய ஒரு திறமையான கலைஞன். அதனால் தான் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள்.

மொத்த டீமையும் கூட்டிட்டு வந்த விஜய் சேதுபதி

இதற்கிடையில் சின்னத்திரையிலும் இவரை கொண்டாடும் வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மாஸ்டர் செப் இந்தியா என்ற நிகழ்ச்சி மூலம் சமையல் போட்டியை தொகுத்து வழங்கினார். அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு சின்னத்திரைக்கு டாட்டா காட்டிவிட்டார். அதன்பின் மறுபடியும் டிவிக்கு வரும் வகையில் விஜய் டிவி வழங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்.

அந்த வகையில் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா டீம் அனைவரையும் பார்க்கலாம். மேலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கடந்து வந்த பாதையை ஒரு வரியில் சொல்லி மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் நான் தொகுத்து வழங்கிய ஒரு சமையல் நிகழ்ச்சி ரொம்பவே சீரியஸ் ஆகவே போய்க் கொண்டிருந்தது என்று சொல்லி சன் டிவியை டேமேஜ் பண்ணும் அளவிற்கு விஜய் சேதுபதி அந்த கருத்தை முன் வைத்திருந்தார்.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெயருக்கு ஏற்றார் போல் கலகலப்பாக மனதில் இருக்கும் பாரங்களை தள்ளி வைக்கும் விதமாக ரொம்பவே சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது என்று விஜய் டிவி தூக்கி வைத்து பேசி இருக்கிறார். இவர் பேசியது எதார்த்தமாக இருந்தாலும் தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியை கலாய்த்தது போல் விஜய் டிவி விஜய் சேதுபதி வைத்து ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது.

போட்டி போட்டு மோதிக்கொள்ளும் சன் டிவி விஜய் டிவி

Trending News