சமீபகாலமாக சன் டிவி நிறுவனம் ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் செய்யாதது அவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளதாம். மேலும் பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த சாதனை விரைவில் பறிபோகும் அபாயம் உள்ளதாம் சன் டிவி.
ஒரு காலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்கியது சன் டிவி நிறுவனம். தங்க வேட்டை, டீலா நோ டீலா, அசத்தப்போவது யாரு, பெப்ஸி உங்கள் சாய்ஸ் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஆனால் சமீபகாலமாக முற்றிலும் சன் டிவி சீரியல் மயமாக மாறிவிட்டது. காலை முதல் இரவு வரை எந்நேரமும் சன் டிவியில் சீரியல் தான். இதனாலேயே ரசிகர்கள் ஒரு கட்டத்தில் சன் டிவி வெறுத்து ஒதுக்கி விட்டனர்.
சீரியல்களாவது சுவாரசியமாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் குப்பையாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சன் டிவி நிறுவனம் தன்னுடைய சன் மியூசிக் சேனலில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலங்கள் போன்றவர்களை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் சன் மியூசிக் என்றாலே ரசிகர்களுக்கு அப்படி ஒரு குஷியாக இருக்கும். ரியோ ராஜ், அஞ்சனா, மணிமேகலை போன்றோர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தனர். விஜய் டிவி சன் டிவியின் இந்தச் சரிவை பயன்படுத்தி தொடர்ந்து நல்ல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகிறது.
சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக் பாஸ், காமெடி ஷோ என வெரைட்டியாக மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதனாலேயே சமீபகாலமாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் பல மடங்கு உயர்ந்து விட்டதாம். விரைவில் சன் டிவியின் நம்பர் ஒன் இடம் விஜய் டிவியிடம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக டெலிவிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.