கடந்த எட்டு மாதத்தில் உலக சினிமாவே தலைகீழாக மாறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னரெல்லாம் ஒரு படத்தை எடுத்தால் எப்படியாவது திரையரங்குகளுக்கு கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்வார்கள்.
இதனால் ஃபைனான்ஸ் பிரச்சனையால் சிக்கிய பல வருடங்கள் அந்த படம் வெளியாகாமல் போய்விடும். ஆனால் இப்போது கதையே வேற. தியேட்டரில் வேண்டாம் என்றால் நேரடியாக ஒடிடி தளங்களில் வெளியாகின்றன.
ஒடிடி தளங்களும் சொதப்பினால் நேரடியாக தொலைக்காட்சிகளில் படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் அதற்கு ஆச்சாரம் போட்டது சன் டிவிதான். கடந்த ஆறு மாதத்தில் இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்து நேரடியாக சன் டிவியில் வெளியிட்டது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியும் அந்த வேலையை செய்ய உள்ளதாம். சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய பெரிய வரவேற்ப்பை பெற்ற பெண் இயக்குனர் ஹலிதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஏலே.
சமுத்திரக்கனி நடித்துள்ள ஏலே படத்தை பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட போவதாக அறிவித்தனர். ஆனால் ரிலீஸ் சமயத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்ததால் அந்த படம் நேரடியாக விஜய் டிவி கைக்கு சென்றுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நேரடியாக ஏலே திரைப்படம் விஜய் டிவியில் வெளியாகப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.