Vijay TV New Serial: சின்னத்திரை ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான கதை களத்தை கொண்ட சீரியல்களை தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றனர். அதிலும் டிஆர்பி-யில் விஜய் மற்றும் சன் டிவிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும்.
இதனால் விஜய் டிவி தற்போது டிஆர்பி-யில் டல்லடிக்கும் சீரியல்களை ஊத்தி மூடி விட்டு, புத்தம் புது சீரியல்களை ஒளிபரப்புகிறது. சமீபத்தில் தான் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் நிறைவடைந்து, ‘நீ நான் காதல்’ என்ற சீரியலை துவங்கினார்கள். இப்போது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் கண்ணே கலைமானே என்ற சீரியலை ஊத்தி மூடப் போகின்றனர்.
இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது. அடுத்த வார தொடக்கத்தில் சக்திவேல் என்ற புத்தம் புது சீரியல் ஒளிபரப்பாக போகிறது. கண்ணே கலைமானே சீரியலில் ராமுக்கு பானு மற்றும் மாதுரி இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், இப்போது பானுவுடன் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
Also Read: பாக்கியா தலையில் விழுந்த பெரிய இடி.. ஆனந்த கூத்தாடும் கோபி, காலை வாரி விடும் மாமி
கிளைமாக்ஸில் இருக்கும் கண்ணே கலைமானே
ஆனால் மாதுரியின் பெற்றோர் அவருக்கு ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து வைக்க பார்க்கின்றனர். ஆனா மாதுரிக்கு இதில் துளி கூட இஷ்டமில்லை. மாதுரிக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுமா? ராம் வந்து மறுபடியும் மாதுரியை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்வாரா? என்ற விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் கண்ணே கலைமானே சீரியலில் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியல் கடந்த வருடம் தான் துவங்கப்பட்டு 350 எபிசோடு கடந்திருக்கிறது, இருப்பினும் டிஆர்பி ரேட்டிங் இல்லாததால் தான் விஜய் டிவி இந்த சீரியலை முடித்துவிட்டு அடுத்ததாக சக்திவேல் சீரியலை துவங்க உள்ளனர்.
Also Read: மகன்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் பாண்டியன்.. செந்திலுடன் திருட்டுத்தனமாக கல்யாணத்தை பண்ணும் மீனா