சீரியல்களை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த சில சேனல்கள் தற்போது அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கின்றன. அதிலும் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவியின் நிலைமை எல்லாம் பரிதாபம் தான்.
சமீபகாலமாக சன் டிவி சீரியல்களில் சொதப்பி வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் தங்களுடைய சீரியல் ரேட்டிங்கை ஏற்றி விட்டனர்.
தாய்மார்களை கவரும் வகையில் சென்டிமென்ட்களை அள்ளி வீசி தங்களுடைய சீரியல்களின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு சென்றனர். தற்போதைக்கு விஜய் டிவியின் சீரியல்கள்தான் அதிக டிஆர்பி பெற்று வருகின்றன.
நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் கொரானா உள்ளே புகுந்து மொத்தத்துக்கும் ஆப்பு வைத்து விட்டது. இது நாள் வரையில் எடுத்த காட்சிகளை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் அனைத்து சேனல்களிலும் இனி அடுத்ததாக ஒளிபரப்ப சரக்கு இல்லை.
இதன் பிறகு எப்போது ஊரடங்கு முடிந்து மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்க போகிறது என்பதும் தெரியவில்லை. இதனால் விஜய் டிவியின் சீரியல் ரேட்டிங்கில் உச்சத்திலிருந்த பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்கள் இனி ஒளிபரப்பப்படாது என தெரிவித்து விட்டனர்.
மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி ஒளிபரப்புவதற்கு இன்னும் எத்தனை மாதகாலம் ஆகுமோ. அதுவரையில் நமக்கு கும்கி படம் தான் என முடிவு செய்துவிட்டார்களாம். இதனால் மீண்டும் பழையபடி டிஆர்பி யில் நம்ம சேனல் கீழே போய் விடுமே என அச்சத்திலும் உள்ளார்களாம்.