உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சமீபகாலமாக சன் டிவி பார்வையாளர்களை விட விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்கு ஏகப்பட்ட பார்வையாளர்கள் கிடைத்து வருகின்றனர். அதற்கு காரணம் இந்த இரண்டு சேனல்களிலும் சீரியல்கள் செம ஸ்ட்ராங்காக இருப்பதுதான்.
ஆனால் சன் டிவியின் நிலைமையோ சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மற்ற சேனல்களைக் காட்டிலும் சீரியல் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் சீரியல் ஹீரோவுக்கு மாஸ் வேடம் கொடுத்து தங்களுடைய சேனலை மண்ணாக்கி வருகின்றனர்.
இப்போதைக்கு போட்டி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்குத்தான். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை ஓரம் கட்டும் அளவுக்கு இதுவரை தமிழில் நிகழ்ச்சிகள் வரவில்லை.
ஆனால் இந்த முறை விஜய் டிவி பெரிதும் நம்பியிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு வேட்டு வைக்கும் வகையில் அதே நேரத்தில் ஜீ தமிழில் உருவாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் இறுதி வாரத்தில் சர்வைவர் நிகழ்ச்சியும், அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட உள்ளன.
இதில் ஜீ தமிழில் உருவாகும் சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கவுள்ளார். ஒரு குறிப்பிட்ட சிலர் 90 நாட்கள் ஒரு தீவில் மாட்டிக் கொண்டு உயிர் பிழைக்க போராடுவது போன்று இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கண்டிப்பாக இந்த முறை விஜய் டிவியை விட ஜீ தமிழ் நல்ல டிஆர்பி பெரும் என்றே கூறுகின்றனர். ஆனால் சன் டிவியோ குக் வித் கோமாளி போன்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.