வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய் டிவி பிரபல டான்ஸ் மாஸ்டர் தற்கொலை.. பிறந்தநாளில் எடுத்த விபரீத முடிவு.!

விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொலைக்காட்சியில் நிறைய நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று விபரீத முடிவு எடுத்துள்ளார்.

இது அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறு வயது முதலே நடனத்தின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக நடனத் திறமையை வளர்த்துக் கொண்டு உள்ளார். அதன் பின்பு சமூக ஊடகங்களில் தனது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Also Read : பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ராதிகா.. மோசமான வில்லியை தரையிறக்கும் முடிவில் விஜய் டிவி

அதாவது டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் நடன மாஸ்டர் ரமேஷ். இவர் விஜய் டிவியில் சில நடன நிகழ்ச்சியில் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். அதன் பின்பு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ரமேஷ் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் ரமேஷ் நடனமாடியுள்ளார். இப்போது தான் ரமேஷின் வாழ்க்கையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் வரத் தொடங்கியது.

Also Read : மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை

இப்படி இருக்கையில் இன்று தனது பிறந்தநாள் என்பதால் மது அருந்தி உள்ளார். மேலும் தனது பிளாட்டில் உள்ள குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து அதையும் வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் தனது குடியிருப்பில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது திரை பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் நடன மாஸ்டர் ரமேஷுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

Trending News