விஜய் டிவியின் டாப் சீரியலை பின்னுக்குத் தள்ளிய சன் டிவி.. திக்குமுக்காடிய டிஆர்பி ரேட்டிங்!

தற்போதைய சூழலில் முன்னணி தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக புதுபுது யுத்திகளை கையாண்டு வருகின்றன.

அந்த வகையில் இவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அனுதினமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்கள்தான். ஏனென்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமல்லாமல் தற்போது ஆண்களும் சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கடந்த சில மாதங்களாக டாப் 3 இடத்தில் இருந்து வந்தது.  ஆனால் தற்போது அந்த சீரியலை பின்னுக்குத்தள்ளி சன் டிவியின் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான ‘ரோஜா’ சீரியல் முன்னிலை வகிக்கிறது.

bharathi-kannamma-cinemapettai

ஏனென்றால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் ரோஜா சீரியல், தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை சமீப வாரங்களில் வெளுத்து வாங்குகிறது.

roja-cinemapettai

அதே போல் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் டாப் 3 இல் இருந்து, டாப் 5 க்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது சுவாரசியம் குறைந்து கொண்டே வருவதால் அதனை பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது.

Advertisement Amazon Prime Banner