வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

GOAT: விஜய் விரும்பாத கேமியோ ரோல் கொண்டு வரும் வெங்கட் பிரபு.. கம்முனும் உம்மனும் இருக்கும் தளபதி

சினிமானாலே வெங்கட் பிரபுவிற்கு விளையாட்டு தான். விளையாட்டாக ஒரு படத்தை எடுத்து ஹிட் கொடுத்து விடுவார். இப்பொழுது கோட் படத்திலும் நிறைய புதுப்புது திருப்பங்களை கொண்டு வந்து விஜய்யை ஆச்சரியப்பட வைக்கிறார்.

எப்படியும் கோட் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கிவிட வேண்டும் என வெங்கட் பிரபு ஒவ்வொரு சீன்களையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார். மாநாட்டுக்கு பின் அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. இந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்டுகளை வெளியில் விடக்கூடாது என விஜய் ஆர்டர் போட்டு இருக்கிறார்.

கம்முனும் உம்மனும் இருக்கும் தளபதி

வெங்கட் பிரபு கடைசியாக எடுத்த படம் கஸ்டடிஅது இவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. பணம் ரீதியாக மட்டுமில்லாமல் வெங்கட் பிரபு இப்படி ஒரு மொக்கை படத்தை எடுத்து விட்டாரே என சினிமாவில் எல்லாரும் பேசத் தொடங்கினர். அதனால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது

இப்பொழுது கோட் படத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக சிவகார்த்திகேயனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைத்து விட்டார் வெங்கட் பிரபு. அந்த காட்சிகள் அனைத்தையும் ஏற்கனவே படமாக்கி விட்டனர். இதற்கு விஜய் அரைமனதோடு சம்மதித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் படத்தில் இருக்கிறார் என்றால் அவருக்கு சற்று ஹைப் குறைந்துவிடும்.

வெங்கட் பிரபுகாகவே விஜய் சிவகார்த்திகேயன் நடிப்பதை ஒத்துக் கொண்டிருப்பார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரஜினி மற்றும் விஜய்யுடன் நடிக்க பெரும் ஆர்வம் காட்டி வந்தார். ரஜினியுடன் நடிப்பது கனவாக மாறியுள்ளது ஆனால் இப்பொழுது விஜயுடன் நடித்து தனது ஆசையை நிறைவேற்றி விட்டார் சிவகார்த்திகேயன்.

Trending News