விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மாஸ்டர். படத்தின் மீது ஏற்பட்ட கலவையான விமர்சனம் படத்தின் வசூலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
தற்போது வரை 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளார். இத்தனைக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் வெளியான மாஸ்டர் படம் இவ்வளவு பெரிய வசூலை அள்ளிக் கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் தியேட்டர்காரர்கள் மாஸ்டர் படத்தை வைத்து நன்றாக சம்பாதித்து விட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே நஷ்டக் கணக்கை காட்டி தயாரிப்பாளரை ஏமாற்றி விட்டார்களாம். இதனால் விஜய்யும் தியேட்டர்காரர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்படி ஒரு சூழ்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ முறையான அனுமதி பெறாமல் ஒரு விஷயத்தை செய்துள்ளது அவரை கைது செய்யும் அளவிற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் மேடைக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட விஜய் சேதுபதி படத்தின் பாடலை ஒலிபரப்பி உள்ளனர். ஆனால் அதன் உரிமை நோவாக்ஸ் என்ற நிறுவனத்திடம் உள்ளதாம்.
முறையாக அனுமதி பெறாமல் அந்த பாடலை ஒளிபரப்பு அதற்காக தற்போது நோவாக்ஸ் நிறுவனம் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மீது கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளனர். போலீசில் அதை சரியாக விசாரிக்காததால் தற்போது கோர்ட் மூலமாக அந்த கேஸ் சிபிசிஐடி விசாரணைக்கு சென்ற உள்ளதாம். ஒரு சின்ன விஷயத்தை கூட கவனித்து செய்யாமல் கோட்டைவிட்ட சேவியர் பிரிட்டோ மீது விஜய் அதிருப்தியில் உள்ளாராம்.